Powered By Blogger

Tuesday, 18 December 2012

ARUDRA DARISANAM 

Festival for 2012 starting from today and will complete on 28th December 2012.

This is a festival , celebrated on the day of Thiruvadirai star in Margazhi month.It is essentially Shaivite festival and celebrates the Cosmic dance of Lord Shiva.
Arudra star is one of two stars that have the prefix "THIRU". Another star is Onamstar - "Thiruonam"favoured for Shiva andMahavishnu repectively.

Lord Nataraja - Cosmic Dance

Arudra denotes a Red Flame. Lord Shiva has also a name called "Semporjyoti" or "Golden Red Flame". It is in the form of light the lord performs his function of five activities which are Creation, Protection, destruction,Embodiment and Release. Nataraja is the manifestation of the Lord Shiva as a Light.In the month of Marghazhi , on the day when Thiruvadirai star and New Moon coincide , we celebrate the esctatic dance of Shiva.




Lord Nataraja Procession-Therottam
On the Thiruvadirai day in margazhi , Lord Natraja comes out in procession to give darshan to his devotees.In Sanskrit ‘Arthirai’ is called ‘Ardhra’ and the Thiruvadirai anointing ceremony is called Ardhra Abisheka and the Thiruvathirai viewing as Ardhra Darshan.It is held as a great achievement to view the Nataraja's procession in Chidambaram.

In Chidambaram abhishekam for the Lord on thiruvadirai day in Margazhi will be performed in a grand manner and the devotees will be given KALI as prasadham.Obtaining the prasadam , is attainment of bliss through the Lord.


Story behind why Kali is given as Prasadham :


A devotee named Sendanar had the habit of eating food after offerring it to Lord and then distribute among other devotees . Only the leftover he will eat.On the tiruvadirai day , due to constant bad weather he couldn't get any essential items for preparring proper meal.He had no other option but to mix water with rice flour and prepare a mashed paste.Lord Shiva understood his predicament.He wanted the people to know how sincere his devotee was to him.He disguised himself as a siva devotee and enjoyed what was given to him as food.And as he stood for a while in the Nataraja Sanctrum,The Lord Showered the Kali all over the premises , in recognition of his deep devotion.Since the day the miracle happened Kali is the special offering to Lord Nataraja on Margazhi.


The Legend Behind Arudhra darisanam :


Arudra Darisanam-Chidambaram Temple
Once when Mahaa Vishnu was lying down on the great Serpent Adhi sesha, Adhi sesha felt Mahaa Vishnu was quite heavy that time. He asked Mahaa Vishnu what was the reason. Mahaa Vishnu said that he was remembering and enjoying the Dance of Lord Shiva. The answer developed the desire in Adhi seesha to see the Great Dance of Lord Shiva. He asked Mahaa Vishnu how his desire could be fulfilled. Mahaa Vishnu asked him to go to Chithamparam and do "tapas". Adhi seesha came to Chithamparam and prayed the Lord for a long time.

There was another muni and devotee of Lord Shiva in that place, called Viyaagra paadha. He prayed to God to get the legs of tiger, so that he can pluck flowers early in the morning to offer to the God, before any bee touches the flower. He was also praying God to see His Great Dance for a long time.Pleased with their prayer the God appeared on the Thiruvaadirai day and danced in Chithamparam. The Nataraja image of the Lord is prayed with great devotion this day. In Chithamparam and other temples it is celebrated as Arudraa dharshanam. In this festival abhisheeka [holy anointing] of Lord Nataraja takes place early in the morning and then He comes around the town.  

In all Lord Shiva Teples Arudra Darshan is celebrated with great devotion.  Arudra Darisanam is celebrated with great devotion in the Hall of Gold - Kanakasabhai at Chidambaram; Thillai - The Hall of Silver Velli Sabhai at Madurai; The Hall of Rubies - RatnaSabhai at Tiruvalankadu; The Hall of Copper - TamaraSabhai at Tirunelveli and the Hall of Pictures - ChitraSabhai in Kutralam.

Lord Natarajar

Lord Nataraja will perform celestial dance. Special Abjshekam, yagam is held in the early morning. Special alankara, puja and deeparadhanai are held after abhishekam. Vedas and Thevaram are chanted and sung with great devotion. In Mylapore Lord Kapaleeswarar temple Aarudhra Darshan was celebrated on 21st December 2010.
Other Famous Shiva shrines : 
Next to Chidamabaram , the Shiva shrines at Perur, Kuttralam and Madurai are famous for this festival.


****************************


திருவாதிரை கொண்டாடுவது  ஏன் ?

மார்கழி மாதம் திருவாதிரையன்று ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சி நடக்கிறது. நடராஜரின் திருநடனம் புரியும் கோயில்களில் இந்த விழா சிறப்பு. ஏன் தெரியுமா?


Lord Shiva- Natarajar in Cosmic Dance
சேந்தனார் என்னும் சிவபக்தர், தில்லையம்பலமான சிதம்பரத்தில் தன் மனைவியுடன் வாழ்ந்து வந்தார். சிவனடியார்கள் வந்தால் அவர்களின் மனம் கோணாமல் உபசரிப்பார். ஒருமுறை, அவ்வூரில் பலத்த மழை பெய்து விறகெல்லாம் நனைந்து விட்டது. அங்கு வரும் அடியவர்களுக்கு சமைத்துக் கொடுப்பதில் பிரச்னை ஏற்பட்டது. இந்த நேரத்தில் யாராவது வந்து விட்டால் அவர்களுக்கு அமுது படைப்பது எப்படி என்று கவலையில் இருந்தபோது, ஒரு சிவனடியார் வந்து சேர்ந்தார். இவர் தேஜசாக ஜடாமுடி தரித்துக் காணப்பட்டார். தம்பதிகளுக்கு கை, கால் உதறியது. ஈரவிறகால் சாதம் சமைப்பது எப்படி என்று யோசித்துக் கொண்டிருந்தார்சேந்தனாரின் மனைவி. இருந்தாலும், எப்படியோ ஒருவாறாக ஊதி நெருப்பு பற்றவைத்தார். அரிசியை மாவாக்கி, உளுந்து சேர்த்து வெல்லமும் நெய்யும் கலந்து களி தயாரித்துவிட்டார்.

அதை சிவனடியாருக்கு படைத்தார். அன்றைய தினம் மார்கழி பவுர்ணமி . திருவாதிரை நட்சத்திரம்.  வந்தவர் அதைச் சாப்பிட்டுவிட்டு, இத்தனை சுவையான களியை தன் வாழ்நாளிலேயே சாப்பிட்டதில்லை என்று சொல்லி மகிழ்ந்தார். ""தினமும் தயிர்ச்சாதமும், புளி சாதமும், சர்க்கரைப் பொங்கலும் சாப்பிட்டுப் பழகிப்போன எனக்கு தாங்கள் அளித்த களி மிகப் பிரமாதம்!'' என்றார். தம்பதியர் ஆனந்தம் கொண்டனர். மறுநாள் காலையில் அவர்கள் தில்லையம்பலம் நடராஜரைத் தரிசிக்கச் சென்றனர். கோயில் நடையெல்லாம் அவர்கள் தயாரித்த களி கொட்டிக் கிடந்தது. நடராஜரின் வாயில் சிறிதளவு களி ஒட்டியிருந்தது. தங்கள் வீட்டிற்கு எழுந்தருளியிருந்தது நடராஜரே என்பதை உணர்ந்து உடல் புல்லரித்துப் போயினர்.நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்கினர்.அன்றுமுதல் நடராஜப்பெருமானுக்கு திருவாதிரை நாளில் களியமுது படைக்கும் பழக்கம் உருவாயிற்று. திருவாதிரை நாளன்று விரதம் இருப்பது மிகவும் சிறந்தது என்கிறார் யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர். அன்று சிறிதளவு களி மட்டும் சாப்பிடலாம்.


மற்றபடி உணவேதும் உட்கொள்வது கூடாது. அதிகாலை 3மணிக்கே எழுந்து, குளிர்ந்த நீரில் நீராடி, உங்கள் ஊரிலுள்ள சிவாலயத்தில் உள்ள நடராஜர் சந்நிதியில் நடைபெறும் திருவாதிரை அபிஷேகத்தை காலை 4 மணிக்கு கண்டு களிக்கலாம்."ஆதிரை' என்ற பெண்மணி திருமணத்தன்றே  கணவனை இழந்தாள். அவள் சிவனிடம் வேண்டி, கணவனின் உயிரை மீட்டாள். அவளது பெயராலேயே "திருவாதிரை' விழா உண்டானதாக கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு கதை வழங்கப்படுகிறது. திருவாதிரை நாளில் நடராஜர் நடனம் கண்டு, வாழ்வில் செல்வம் பெறுவோம்.

சிதம்பரம் நடராஜர்
தென்னக நடராஜர்கள் :

சிதம்பரம் நடராஜர் சிலை எப்படி இருக்கிறதோ, அதற்கு சற்றும் மாறாமல் நான்கு சிலைகள் அக்காலத்தில் வடிவமைக்கப்பட்டன. அவற்றைக் காண, திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள செப்பறை, கரிசூழ்ந்தமங்கலம், கருவேலங்குளம், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கட்டாரிமங்கலம் கோயில்களுக்கு செல்ல வேண்டும்.இந்த நான்கு கோயில்களுக்குமே ஒரே வரலாறு தான். உத்தரதேச மன்னன் சிங்கவர்மன், கொடுங்கோல் ஆட்சி செய்தான். பிற்காலத்தில் மனம் திருந்திதவமிருக்க காட்டிற்குச் சென்றான். அந்த காட்டில் வியாக்ரபாதரும், பதஞ்சலி முனிவரும் தவம் புரிந்து கொண்டிருந்தனர். அவர்களுக்கு இறைவன் திருநடனக்காட்சி அருளினார். அந்தக்காட்சியை சிங்கவர்மனும் கண்டான். முனிவர்களின் அறிவுரைப்படி நடராஜருக்கு சிதம்பரத்தில் கோயில் எழுப்பினான். நடராஜர் சிலை செய்யும்படி சிற்பிகளை பணித்தான்.

அவர்கள் தாமிரத்தால் ஒரு சிலையை செய்தனர். அதைப்பார்த்த அரசன் தாமிர சிலையே இவ்வளவு அழகாக இருக்கிறது என்றால், தங்கத்தால் செய்தால் எப்படி இருக்கும் என எண்ணிப்பார்த்தான்.தலைமை சிற்பியான நமச்சிவாய முத்து ஸ்தபதியிடம் ஏராளமான பொன் கொடுத்து சிலை செய்ய உத்தரவிட்டான். சிலை தயாரானது. ஆனால், அது தாமிரமாக மாறிவிட்டது. சிற்பிக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. மன்னனுக்கு தகவல் சென்றது. அவன் சிற்பியை சிறையில் அடைத்தான்.அன்றிரவு மன்னனின் கனவில் தோன்றிய சிவன், தான் தங்கமாக இருக்க விரும்பவில்லை என்றும், எனவே தாமிர சிலையாக மாறியதாவும் கூறினார். இதையடுத்து சிற்பி விடுதலை செய்யப்பட்டார்.இதையடுத்து, அந்த சிலையை சிதம்பரம் கோயிலில் அமைத்தனர். முதலில் செய்யப்பட்ட தாமிர சிலையை சிவனின் உத்தரவுப்படி தென்புறத்திற்கு நமச்சிவாய ஸ்தபதி தூக்கி வந்தார். எந்த இடத்தில் ”மை அதிகமாகிறதோ, அங்கே வைத்துவிட வேண்டும் என் சிவன் சொல்லியிருந்தார். தாமிரபரணி கரையில் செப்பறை என்ற இடத்திற்கு வரும் போது சிலை கனத்தது. அந்த இடத்திலேயே சிலையை வைத்துவிட்டார்.


                 மாணிக்க வாசகர்
ராமபாண்டியன் என்ற மன்னன் அவ்விடத்தில் ஒரு கோயில் கட்டினான். நடராஜருக்கு தனி சந்நிதி அமைத்தான். ராமபாண்டியனின் எல்லைக்குட்பட்ட பகுதியை ஆண்ட சிற்றரசனான வீரபாண்டியன், செப்பறையில் இருந்த நடராஜர் சிலையைக் கண்டான். அதேபோல் தனக்கும் இரண்டு சிலைகள் வேண்டும் என ஸ்தபதியிடம் கூறினான். சிலை செய்யும் பணி துவங்கியது. இதில் ஒன்றை கட்டாரிமங்கலத்தில் உள்ள கோயிலிலும், மற்றொன்றை கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள கோயிலிலும் வைக்க எண்ணினான். சிலை செய்யும் பணி முடிந்தது. சிலைகளின் அழகைக் கண்டு மன்னன் ஆனந்தம் கொண்டான். இதேபோல சிலைகள் வேறு யாருக்கும் கிடைக்கக்கூடாது என்ற எண்ணத்தில் ஸ்தபதியை கொன்றுவிடும்படி காவலாளிகளுக்கு கட்டளையிட்டான். வீரர்கள் ஸ்தபதியின் மீது இரக்கம் கொண்டு அவரது கையை மட்டும் வெட்டிவிட்டனர். இதைக் கேள்விப்பட்ட ராமபாண்டியன், வீரபாண்டியன் மீது கோபம் கொண்டான்.

ஸ்தபதியின் கையை வெட்டிய வீரபாண்டியனின் கைகளைத் துண்டித்தான்.இவ்வாறு செய்யப்பட்ட இரண்டு சிலைகளும் கட்டாரிமங்கலம் மற்றும் கரிசூழ்ந்தமங்கலத்தில் உள்ள சிவாலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன. இதன் பிறகு ஸ்தபதிக்கு மரக்கை பொருத்தப்பட்டது. கலையார்வம் மிக்க ஸ்தபதி, மரக்கைகளின் உதவியுடன், முன்னைவிட அழகாக மற்றொரு சிலை செய்தார். அந்தச்சிலையின் அழகைப் பார்த்து அதன் கன்னத்தில் கிள்ளினான். கிள்ளிய வடுவுடன் கூடிய சிலை கருவேலங்குளம் கோயிலில் வைக்கப்பட்டது.

எப்படி செல்வது:


திருநெல்வேலிக்கு சற்று முன்புள்ள தாழையூத்தில் இருந்து ராஜவல்லிபுரம் செல்லும் விலக்கில் திரும்பி  செப்பறையை அடையலாம். அங்கிருந்து திருநெல்வேலி பைபாஸ் ரோடு வழியாக பத்தமடை செல்ல வேண்டும். பத்தமடையிலிருந்து கரிசூழ்ந்தமங்கலம் விலக்கில் திரும்பி 3 கி.மீ., தூரத்திலுள்ள கரிசூழ்ந்தமங்கலம் செல்லலாம்.



இங்கிருந்து பத்தமடை வழியாக நாகர்கோவில் செல்லும் ரோட்டில் 15 கி.மீ., சென்றால் கருவேலங்குளத்தை அடையலாம். பின்பு களக்காடு, நான்குநேரி, மூலக்கரைப்பட்டி வழியாக கட்டாரிமங்கலத்தை 40 கி.மீ., கடந்து அடையலாம்.  ஆருத்ரா தரிசனம் அன்று இந்தக் கோயில்கள் முழுநேரமும் திறந்திருக்கும். மற்ற நாட்களில் காலை 7.30-10 மணி, மாலை 5-6.30 மணி வரை திறந்திருக்கும்.

Source: http://divyadarisanams.blogspot.in/2010/12/arudra-darisanam.html

An Invitation to Suryakund Consecration……..

You can receive the Linga Bhairavi Yantra during the Yantra Ceremony - a powerful initiation conducted by Sadhguru.

For details please contact + 91 944 250 4720

http://lingabhairavi.org/offerings-and-rituals/yantras-gudis/yantra-ceremony/

You can receive the Linga Bhairavi Yantra during the Yantra Ceremony - a powerful initiation conducted by Sadhguru.

For details please contact + 91 944 250 4720 

http://lingabhairavi.org/offerings-and-rituals/yantras-gudis/yantra-ceremony/

Thursday, 20 September 2012

Chola Dynasty (Tamil)


சோழர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சோழ நாடு
சோழப் பேரரசு
கி.மு. 300கள் – கி.பி.1279Blank.png 
சோழப் பேரரசு கொடி
கொடி
சோழப் பேரரசு அமைவிடம்
சோழப்பேரரசின் ஆட்சி, அதிகாரத்தின் உச்சம்(கி.பி.1050)
தலைநகரம்முற்காலச் சோழர்கள்: பூம்புகார்,உறையூர்,
இடைக்காலச் சோழர்கள்:பழையாறை,தஞ்சாவூர்
கங்கைகொண்ட சோழபுரம்
மொழி(கள்)தமிழ்
மதம்இந்து
அரசுமுடியாட்சி
King
 - கி.பி.848-871விசயாலயச் சோழன்
 - கி.பி.1246-1279மூன்றாம் இராஜேந்திர சோழன்
பண்டைக்காலம்மத்திய காலம்
 - நிறுவிய ஆண்டுகி.மு. 300கள்
 - இடைக்காலச் சோழர்களின் எழுச்சிகி.பி.848
 - கலைக்கப்பட்டதுகி.பி.1279
பரப்பளவு
 - கி.பி.1050 கணிப்பு36,00,000 கிமீ²(13,89,968 சதுர மைல்)

கி.பி.1030-ல் சோழ மண்டலம்
சோழ மன்னர்களின் பட்டியல்
முற்காலச் சோழர்கள்
செம்பியன்எல்லாளன்
இளஞ்சேட்சென்னிகரிகால் சோழன்
நெடுங்கிள்ளிநலங்கிள்ளி
கிள்ளிவளவன்கோப்பெருஞ்சோழன்
கோச்செங்கணான்பெருநற்கிள்ளி
மாற்றார் இடையாட்சி கி.பி. 200-848
இடைக்காலச் சோழர்கள்
விசயாலய சோழன்கி.பி. 848-871(?)
ஆதித்த சோழன்871-907 CE
பராந்தக சோழன் Iகி.பி. 907-950
கண்டராதித்தர்கி.பி. 949/50-957
அரிஞ்சய சோழன்கி.பி. 956-957
சுந்தர சோழன்கி.பி. 956-973
ஆதித்த கரிகாலன்கி.பி. 957-969
உத்தம சோழன்கி.பி. 970-985
இராசராச சோழன் Iகி.பி. 985-1014
இராசேந்திர சோழன்கி.பி. 1012-1044
இராசாதிராச சோழன்கி.பி. 1018-1054
இராசேந்திர சோழன் IIகி.பி. 1051-1063
வீரராஜேந்திர சோழன்கி.பி. 1063-1070
அதிராஜேந்திர சோழன்கி.பி. 1067-1070
சாளுக்கிய சோழர்கள்
குலோத்துங்க சோழன் Iகி.பி. 1070-1120
விக்கிரம சோழன்கி.பி. 1118-1135
குலோத்துங்க சோழன் IIகி.பி. 1133-1150
இராசராச சோழன் IIகி.பி. 1146-1163
இராசாதிராச சோழன் IIகி.பி. 1163-1178
குலோத்துங்க சோழன் IIIகி.பி. 1178-1218
இராசராச சோழன் IIIகி.பி. 1216-1256
இராசேந்திர சோழன் IIIகி.பி. 1246-1279
சோழர் சமூகம்
சோழ அரசாங்கம்சோழ இராணுவம்
சோழர் கலைசோழர்கால இலக்கியம்
பூம்புகார்உறையூர்
கங்கைகொண்ட சோழபுரம்தஞ்சாவூர்
தெலுங்குச் சோழர்கள்
edit
சோழர் என்பவர் பழந்தமிழ்நாட்டை ஆண்ட மூவேந்தர்களுள் ஒரு குலத்தவராவர். மற்ற இருவர் சேரர்களும் பாண்டியர்களும் ஆவர். நெல் இயற்கையாகவோ, மிகுதியாகவோ விளைந்த நாடு சோழ நாடெனப்பட்டது. 'சோழ நாடு சோறுடைத்து என்பது பழமொழி'. எனவே சோறுடைத்த நாடு 'சோறநாடு' ஆகிப் பின் சோழ நாடாகியது என்பர். நெல்லின் மற்றொரு பெயரான சொல் எனும் பெயரே லகரம்-ழகரம் ஆகத் திரிந்து "சோழ" என்று வழங்கிற்று என்பார் தேவநேயப் பாவாணர்.[1] சேரர்பாண்டியர் என்ற பெயர்களைப் போன்று சோழர் என்பது பண்டைக் காலந்தொட்டே ஆட்சி செய்து வரும் குடி அல்லது குலத்தின் பெயராகும் என்பது பரிமேலழகர் கருத்து. சோழ மன்னர்களது ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளும், மக்களும் பண்டைக்காலம் முதலே இப்பெயராலேயே குறிப்பிடப்பட்டு வந்துள்ளனர். சோழர் குலம் வளம் பொருந்திய காவிரி ஆற்றுப் படுகைப் பகுதியிலேயே தோற்றம் பெற்றது. கிறித்துவுக்கு முந்தைய நூற்றாண்டுகளிலேயே சோழர் குலம் பெருமையுற்று விளங்கியதாயினும், கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின்னர் சோழ மன்னர்கள் சிற்றரசர் நிலைக்குத் தாழ்ந்து போயினர். பழைய சோழமண்டலப் பகுதிகளிலே, உறையூர்பழையாறு போன்ற இடங்களில் அவர்களது சிற்றரசுகள் நிலவின. கி.பி ஒன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் தமிழ் நாட்டில் சோழர்கள் மீண்டும் வலிமை பெறத்தொடங்கினர். பத்தாம், பதினோராம் நூற்றாண்டுகள் சோழர் குலத்தின் பொற்காலமாக விளங்கியது. கி.பி 13-ஆம் நூற்றாண்டு வரை சோழரது ஆட்சி தமிழகத்தில் நிலவியது.
கி.பி இரண்டாம் நூற்றாண்டையும் அதற்கு முந்திய காலப்பகுதியையும் சேர்ந்த சோழர் முற்காலச் சோழர் என வரலாற்று ஆய்வாளர்களினால் குறிப்பிடப்படுகின்றனர். முற்காலச் சோழர்களில்கரிகால் சோழன் புகழ் பெற்று விளங்கினான். 9 ஆம் நூற்றாண்டுக்குப் பின் வலிமை பெற்று விளங்கிய சோழ மன்னர் பிற்காலச் சோழர் எனப்படுகின்றனர். இவர்களில், முதலாம் இராசராச சோழனும், அவனது மகனான முதலாம் இராசேந்திர சோழனும், இந்திய வரலாற்றில் குறிப்பிடத்தக்க மன்னர்களாவர்.
கி.பி.10-12-ஆம் நூற்றாண்டுகளில், சோழர்கள் வலிமை பெற்று மிகவும் உயர் நிலையில் இருந்தனர். அக்காலத்தில் சோழ நாட்டையாண்ட மன்னர்களில், முதலாம் இராசராசனும், முதலாம் இராசேந்திரனும் முதன்மையானவர்கள். அவர்கள் காலத்தில் சோழநாடு, படையிலும், பொருளாதாரத்திலும், பண்பாட்டிலும் வலிமை பொருந்திய பேரரசாக ஆசியா முழுவதிலும் செல்வாக்குக் செலுத்தியது. இவர்களுடைய எல்லை வடக்கே ஒரிசா வரையிலும் கிழக்கில் ஜாவாசுமத்ராமலேசியா வரையும், தெற்கே மாலைத்தீவுகள் வரையிலும் விரிந்து இருந்தது. இராசராசன்,தென்னிந்தியா முழுவதையும் வெற்றி கொண்டதுடன், தெற்கே இலங்கையின் வடக்குப் பகுதியையும், மாலத் தீவையும் கூடக் கைப்பற்றியிருந்தான். இராசேந்திரன் காலத்தில் சோழர் படை வட இந்தியாவிலுள்ள கங்கைக் கரை வரை சென்று பாடலிபுத்திரத்தின் மன்னனான மகிபாலனைத் தோற்கடித்தது. அத்துடன் சோழரின் கடற்படை மலாய் தீபகற்பத்திலுள்ள கடாரம்ஸ்ரீவிஜயம் மற்றும் சில நாடுகளையும் வென்றதாகத் தெரிய வருகிறது. இந்திய அரசர்களுள் கடல் தாண்டி கடற்படை மூலம் வெற்றி கொண்டவர்கள் சோழர்களே ஆவர்.
சோழர்களின் கொடி புலிக்கொடி. சோழர்களின் அடையாள முத்திரையான புலிச்சின்னம் அவர்களது கொடியிலும் பொறிக்கப்பட்டது. இப்புலிச் சின்னத்தைப்பற்றி பல இடங்களில் கூறும் இலக்கியங்கள், இதன் தோற்றத்தைப்பற்றி ஒன்றும் கூறவில்லை. சோழர் சூடும் மலர் ஆத்தி.

பொருளடக்கம்

  [மறை

[தொகு]தோற்றமும் வரலாறும்

சோழர்களின் தோற்றம் பற்றிய தெளிவான சான்றுகள் எதுவும் இல்லை. பொதுவாகத் தமிழ் நாட்டு அரச குடிகள் பற்றிய தகவல்களைப் பெற உதவும் மூலங்களான, சங்க இலக்கியங்கள் கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலத்தைச் சேர்ந்த சோழ மன்னர்கள் பற்றி ஓரளவு தகவல்களைப் பெற உதவினாலும், அவர்கள் வாழ்ந்த காலப் பகுதிகளை ஐயத்துக்கு இடமின்றி அறிந்து கொள்வதோ, அவர்கள் வரலாறுகளை முழுமையாக அறிந்து கொள்வதோ இயலவில்லை. இலங்கையின் பாளி மொழியில் எழுதப்பட்ட வரலாற்று நூலான மகாவம்சத்தில் தரப்படுகின்ற செய்திகள் சில சோழ மன்னருடைய காலங்களைத் தீர்மானிப்பதற்குப் பயனுள்ளவையாக அமைகின்றன. இவற்றைவிட, சோழ நாடு மற்றும் அங்கிருந்த நகரங்கள் பற்றிய சில தகவல்களைப் பெறுவதற்கு, கிறித்து சகாப்தத்தின் முதலாவது நூற்றாண்டில், அலெக்சாந்திரியாவைச் சேர்ந்த வணிகன் ஒருவன் எழுதிய எரித்ரேயன் கடலின் வழிகாட்டி நூல் (Periplus of the Erythraean Sea), அதன் பின் அரை நூற்றாண்டு கழித்து தொலெமி (Ptolemy) என்னும் புவியியலாளரால் எழுதப்பட்ட நூல் என்பவை ஓரளவுக்கு உதவுகின்றன. இவற்றுடன் கல்வெட்டுகள், செப்புப் பட்டயங்கள் என்பனவும் சோழர் பற்றிய தகவல்களைத் தருகின்றன.

[தொகு]முற்காலச் சோழர்கள்


கரிகால் சோழன் காலத்துச் சோழ நாடு. கி.பி 120
இன்றைய தஞ்சை, திருச்சி உள்ளிட்ட காவிரி பாயும் மாவட்டங்கள் தன்னகத்தே கொண்டது சோழ நாடு. இந்நாடு எட்டுத்தொகை, பத்துப்பாட்டு ஆகிய சங்க நூல்களிலும் சங்க காலத்திற்குப் பின் தோன்றிய பல இலக்கியங்களிலும் போற்றப்படுகிறது. சங்க இலக்கியங்களில் காணப்படும் காலத்தால் முந்திய சோழ மன்னன், வேல் பல் தடக்கைப் பெருவிறல்கிள்ளி என்பவனாவான். இவனை பரணர்,கழாத்தலையார் ஆகிய புலவர்கள் பாடியுள்ளனர். மற்றொரு சோழன் உருவப் பல்தேர் இளஞ்சேட்சென்னி என்னும் பெயர் கொண்டவன். இவன் மௌரியரும், கோசரும் சேர்ந்த படையைத் தோற்கடித்தவன் என்று அகநானூற்றுப் பாடலொன்றில் புகழப்படுகின்றான். இவனே முதலாம் கரிகால் சோழனின் தந்தையாவான். புறநானூற்றில் இவனைப் பற்றிய குறிப்புக்கள் உள்ளன.

[தொகு]முதலாம் கரிகாலன்

கரிகால சோழன் இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சோழ மன்னன் ஆவான். கரிகாலன் முற்காலச் சோழர்களில் மிகப் புகழ் பெற்றவன் இவனே. இவன்இளஞ்சேட்சென்னியின் மகன் ஆவான்.கரிகால சோழனுக்கு திருமாவளவன்,மற்றும் பெருவளத்தான் என்னும் பட்டப்பெயர்களும் உண்டு. முதலாம் கரிகாலன் தாய் வயிற்றில் இருந்தபோதே அவன் தந்தையான இளஞ்சேட்சென்னி இறக்கவே,தாய் வயிற்றிலிருந்தபடியே அரச பதவி பெற்றான்.கரிகாலன் என்பதற்குக் கருகிய காலை உடையவன் என்பது பொருள்.இளம் வயதில் இவனுக்கு ஏற்பட்ட தீவிபத்தின் காரணமாக இப்பெயர் இவனுக்கு வழங்கலாயிற்று.ஆனால் பிற்காலத்தில் வடமொழி செல்வாக்குப்பெற்ற போது(எதிரிகளின்)யானைகளின் யமன் என்று இப்பெயருக்கு விளக்கம் தரப்பட்டது.
கரிகாலன் சோழகுலத்தை ஒரு குறுநில அரசிலிருந்து[மேற்கோள் தேவை] காஞ்சி முதல் காவிரி வரை பரவ வழிவகுத்தான். பிற்கால வரலாற்றில் இவனது வெற்றிகளும் சாதனைகளும் மிகவும் மிகைப்படுத்தப்பட்டன. அரியாசனம் ஏறுவதற்கு தன் பிறப்புரிமையான அரச பதவியை இழந்து சில ஆண்டுகள் சிறையில் வைக்கப்பட்டான். சிறையினின்று இவன் தப்பிச்சென்று ஆட்சியைக் கைப்பற்றியதை வருணித்துள்ளனர். கரிகாலன் சிறையில் சிறைக்காவலரரைக் கொன்று தப்பித்தான், பிறகு படிப்படியாகப் புகழும் பெருமையையும் அடைந்தான்.
கரிகால் சோழன், சேர மன்னன் பெருஞ்சேரலாதனுடன் போரிட்டான். வெண்ணி என்ற இடத்தில் நடைபெற்ற போரில் கரிகாலனுடைய அம்பு சேரமன்னன் பெருஞ்சேரலாதனின் முதுகில் பாய்ந்ததால் அதை அவமானமாகக் கருதிய சேரன் வடக்கிருந்து உயிர் விட்டது பற்றிச் சங்க இலக்கியப் பாடலொன்று கூறுகிறது. பாண்டிய மன்னர்களையும் பதினோரு வேளிரையும் வெற்றிகொண்ட கரிகாலனுடைய ஆட்சி நீண்ட காலம் நடைபெற்றது. காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல்லணை இவனது காலத்தது ஆகும். உலகின் மிகப் பழமையான அணைக்கட்டாக "கல்லணை விளங்குகிறது. இவன்இமயம் வரை சென்று பல அரசர்களை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்டித் திரும்பினான் என்று கூறப்படுகிறது.

[தொகு]பிற சோழ மன்னர்கள்

இவன் காலத்துக்குப் பின் ஆண்ட சோழ மன்னர்களில் இராசசூய யாகம் வேட்ட பெருநற்கிள்ளி, போர்வைக் கோப்பெருநற்கிள்ளி, பாண்டிய நாட்டுப் புலவர் பிசிராந்தையாரோடு நட்பு பூண்டகோப்பெருஞ்சோழன்குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்,இலவந்திகைப் பள்ளி துஞ்சிய நலங்கிள்ளி, குராப்பள்ளித் துஞ்சிய பெருந் திருமாவளவன் போன்ற பலரின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் இடம்பெறுகின்றன. இவர்களுள் போர் அவைக்கோப் பெருநற்கிள்ளி என்பவனே பிற்காலத்தில் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி என அழைக்கப்பட்டான் என ஆய்வாளர் சிலர் கருதுகிறார்கள். மேலும் நல்லுருத்திரன், கணைக்கால் இரும்பொறையை வென்று சிறைப்படுத்திய கோச்செங்கணான் ஆகிய மன்னர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

[தொகு]முற்காலச் சோழர்களின் வீழ்ச்சி

கி.பி இரண்டாம் நூற்றாண்டுக்குப் பின் சோழரிடையே அதிகாரப் போட்டிகள்[மேற்கோள் தேவை] வலுப்பெற்றதால் அவர்கள் வலுவிழந்த நிலையில் இருந்தனர். இவ்வாறு சோழர் வலுவிழந்ததைப் பயன்படுத்தி[மேற்கோள் தேவை] 'களப்பாளர்' அல்லது களப்பிரர் எனப்படும் ஒரு குலத்தவர் தமிழ் நாட்டுக்கு வடக்கிலிருந்து வந்து சோழநாட்டின் பல பகுதிகளைப் படிப்படியாகக் கைப்பற்றிக் கொண்டனர். கி.பி இரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் காஞ்சியை மையமாகக் கொண்டிருந்த சோழநாட்டின் பகுதி களப்பிரர்களிடம் வீழ்ச்சியடைந்தது. சோழர்கள் பல இடங்களுக்கும் சிதறினர். கி.பி நான்காம் நூற்றாண்டின் முற்பகுதியில், அச்சுத களப்பாளன் என்னும் களப்பிர மன்னன் காவிரிக் கரையிலிருந்த உக்கிரபுரத்தில் இருந்து ஆட்சி செய்து வந்ததாகத் தெரிகிறது. எனினும் இக்காலப்பகுதியில் சோழநாட்டின் ஆதிக்கத்துக்காகப் பல்லவர்களுக்கும் களப்பிரருக்கும் இடையில் போட்டி இருந்து வந்துள்ளது. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னர் பல்லவ மன்னன் சிம்மவிட்டுணு களப்பிரர்களிடமிருந்து இப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டான். பல்லவர்களுடைய ஆட்சிக்காலத்திலும் சோழர்கள் சிற்றரசர்களாக ஆங்காங்கே ஆட்சி செய்து வந்தனர். எனினும், பண்டைய சோழநாட்டின் பெரும்பகுதி, பல்லவர்களுக்கு அடங்கிய முத்தரையர்களினால் ஆளப்பட்டு வந்தது.

[தொகு]களப்பிரர்கள்

நாட்டில் தெளிவற்ற பல அரசியல் மாறுதல்களுக்குக் காரணமாக இருந்தவர்கள் களப்பிரர்கள். களப்பிரர்களைப்பற்றிப் பாண்டியர்களின் வேள்விக்குடிப்பட்டயமும், பல்லவர்களின் சில பட்டயங்களும் கூறுகின்றன. பாண்டியர்களும் பல்லவர்களும் தம் ஆட்சியை நிலைநாட்ட வேண்டி ஆறாம் நூற்றாண்டின் இறுதியில் இக்குலத்தை அடியோடு முறியடித்தமை அவர்கள் மேற்கொண்ட முதல் நடவடிக்கையாகும்.
இவர்களில் குறிப்பிடத்தக்க ஒரு மன்னன், அச்சுதவிக்கந்தன். இம்மன்னனே சேர சோழ பாண்டிய மன்னர்களைச் சிறையெடுத்தான் என்று இலக்கியங்களில் சிறப்பித்துக் கூறப்படும் அச்சுதன் ஆவான். கி.பி.பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த யாப்பருங்கலக் காரிகையின் ஆசிரியரான அமிர்தசாகர் இவனைப்பற்றிய சில பாடல்களை மேற்கோள் காட்டியுள்ளார். இவன் பௌத்த மதத்தைச் சேர்ந்தவனாய் இருக்கக்கூடும்.

[தொகு]ரேனாண்டு சோழர்கள்


களப்பிரர் கால ரேணாடு. (சாம்பல் நிறத்திலுள்ள வெள்ளைப் பகுதி) பொ.பி. 3-5 நூற்றாண்டு.[2]
களப்பிரர் ஆட்சி காரணமாக சோழர்கள் தமிழகத்தில் செல்வாக்கிழந்த நிலையில், சோழ இளவரசர்கள் சிலர் தமிழகத்தை விட்டு வெளியேறித் தெலுங்கு, கன்னட நாடுகளுக்குச் சென்று குடியேறி ஆட்சியை நிறுவினார்கள்.இவர்கள் ரேநாட்டுச் சோழர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[2] இவ்வாறு சென்ற சோழர்கள் கடப்பை, கர்நூல், அனந்தப்பூர் மாவட்டங்களில் குடியேறி 'ரேனாண்டு சோழர்கள்' என்று சிறப்புப் பெற்று விளங்கினர். இவர்கள் தாங்கள் கரிகாலன் வழியினர் என்று உரிமை கொண்டாடினர்.[2]
மைசூர் தலைக்காடு பகுதியை ஆண்ட கங்கர்கள் தம்மை விருத்தராஜா முத்தரைசர் என்று அழைத்துக் கொண்டார்கள். இவர்கள் தமிழ் முதுகுடிமக்கள் எனக் குறிப்பதற்கே தம்மை முதுஅரசர்-முத்தரசர் என்று கூறிக்கொண்டனர் எனக் கண்டோம் .கங்க அரசர்களில் கி.பி. 550லிருந்து 600க்குள் ஆண்ட துர்விநீதன் என்ற சிறந்த மன்னனின் தேவி ஒரு சோழ இளவரசியாவாள் அவள் "உரகபுரத்தை ஆண்ட கரிகால சோழனின் வழிவந்தவனும் பரம க்ஷத்திரியனுமான சோழ அரசனின் பெண்" என்று குறிக்கப்பெறுகிறாள். அதைக் குறிக்கும் செப்பேடு "உரகபுராதிப பரம க்ஷத்திரிய சோழகுலதிலக ஸ்ரீதக்தசரண சந்தான", தக்தசரண என்றால் தீயால் கருகிய காலை உடையவன். அவனது சந்தானம் வழித் தோன்றிய என்று பொருள்.
'யுவான் சுவாங்' என்ற சீனப் பயணி இவர்கள் நாட்டை' சூளியே' என்றும் அவர்கள் தம்மைச் சோழன் கரிகாலன் பரம்பரையினரைச் சேர்ந்ததாகக் கூறிக்கொண்டனர் என்றும் குறிப்பிடுகிறார். இச்சோழப் பேரரசர்களின் சோழநாட்டு எல்லை, தான்ய கடகத்திற்கு தென்மேற்கே 200 கல் தொலைவில் அமைந்திருந்ததாகவும் அது 480 கல் சுற்றளவு கொண்டதாகவும் தலைநகரம் 2 கல் சுற்றளவு கொண்டதாகவும் அச்சீனப்பயணி தன் பயணக்குறிப்புகளில் குறிப்பிட்டுள்ளார்.[3]

[தொகு]தமிழகச் சோழர்கள்

சங்க கால மன்னனான திருமாவளவன்(கரிகால் பெருவளத்தான்) ஆட்சிக்குப் பின்[மேற்கோள் தேவை] சோழ நாடு களப்பிரர் படையெடுப்பால் வீழ்ச்சியடைந்தது. அச்சுத விக்கிராந்தகன் என்னும் களப்பிர மன்னன் சோழநாட்டை[மேற்கோள் தேவை] ஆண்டான். அச்சுதனின் ஆட்சிக்காலத்திற்குப் பிறகு களப்பிரர்களை முறியடித்த பல்லவர்களும்பாண்டியர்களும் தங்கள் ஆட்சியினை நிலைநாட்டினர், தம் சுதந்திரத்தை மீண்டும் நிலைநாட்ட இயலாத சோழ மன்னர்கள், காவிரிக்கரைப்பகுதிகளில் குறிப்பாக உறையூர்பழையாறை போன்ற பகுதிகளில் ஏறத்தாழ நூறாண்டுகள் புகழ் மங்கிய நிலையில் வாழ்ந்து வந்தனர். இக் காலத்தில் வாழ்ந்த சோழ மன்னர்களைப்ற்றி அறிய முடியவில்லை, இக்காலத்தைச் சேர்ந்த கல்வெட்டுக்களும் இலக்கியமும் இச்சோழ மன்னர்களைப்பற்றி மேலெழுந்த வாரியாக கூறும்போது, காவிரிக்கரையில் இவர்கள் தொடர்ந்து வாழந்தனர் என்று கூறுகின்றனவே தவிர, வரலாற்றுச் செய்திகளைத் தரவில்லை. இதன் காரணமாக கி.பி. 3-ம் அல்லது 4-ம் நூற்றாண்டு முதல் 9-ம் நூற்றாண்டு வரை சோழர்களைப் பற்றிய செய்திகள் கிடைக்கப் பெறவில்லை.
தமிழகத்தில் இருந்த சிற்றரசர்களான சோழர்கள் தம் ஆட்சியை மீண்டும் ஏற்படுத்த தக்க சமயத்தை எதிர்பார்த்திருந்தனர். வடக்கிலும் தெற்கிலும் புதிதாக ஏற்பட்ட அரசுகள் சோழ மன்னர்களை ஓரளவு புறக்கணித்தாலும் இவர்களது பழம் புகழை மதிக்கின்ற வகையில், சோழர்குல மகளிரை மணந்ததோடு, தம்மிடம் பணியாற்ற விரும்பிய சோழ இளவரசர்களுக்குப் பதவிகளையும் அளித்தனர்.பல குறுநில மன்னர்களோடு திருமணத் தொடர்பு கொண்டு இழந்த செல்வாக்கை சோழர்கள் மீட்க முயன்றனர். இறுதியில் உறையூரை ஆண்ட சிற்றரசனான விசயாலய சோழன், களப்பிர மன்னர் குலத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் முத்தரையர்களிடமிருந்து தஞ்சையைக் கைப்பற்றிப் பிற்காலச் சோழர் பரம்பரையைத் தோற்றுவித்தான்.

[தொகு]பிற்காலச் சோழர்கள்

பிற்காலச் சோழர்களின் வரலாற்றை அறிய வெங்கையா, உல்ச், கிருட்டிணசாத்திரி ஆகியோர் தொகுத்த கல்வெட்டுகளும் மன்னர்கள் வெளியிட்ட செப்பேடுகளும் வழி செய்கின்றன. அன்பில் பட்டயங்கள், திருவாலங்காட்டுச் செப்பேடுகள், கரந்தைச் செப்பேடுகள், ஆனைமங்கலம் செப்பேடுகள், லெடன் செப்பேடுகள் ஆகியவை அவற்றுள் சில. இவை தவிர இலக்கியஇலக்கணங்களும் கலிங்கத்துப்பரணிமூவருலாபெரியபுராணம்பன்னிரு திருமுறைகள், திவ்யசூரிசரிதம், வீர சோழியம்தண்டியலங்காரம் போன்ற நூல்களும் இக்காலத்தை அறிய உதவும் சன்றுகளாக உள்ளன.

பிற்கால மற்றும் சாளுக்கிய சோழ மன்னர்களின் அட்டவணை

[தொகு]விசயால சோழன் (கி.பி.850-871)

கி.பி ஒன்பதாம் நூற்றாண்டில் தமிழ் நாட்டில் பல்லவர்களுக்கும், தென்பகுதிகளில் வலுவுடன் இருந்த பாண்டியர்களுக்கும் இடையில் போட்டி நிலவியது. இக்காலத்தில் சோழச் சிற்றரசர்கள் பல்லவர்களுக்கு ஆதரவாக இருந்ததாகத் தெரிகிறது.பழையாறையில் தங்கி குறுநில மன்னனாக இருந்த சோழ மன்னன் விசயாலயன் என்பவன், கி.பி 850-இல் தஞ்சையைத் தலைநகராகக் கொண்டு ஆண்டு வந்தமுத்தரையர்களைத் தோற்கடித்துத் தஞ்சையைக் கைப்பற்றி அங்கே தனது ஆட்சியை நிறுவினான். பாண்டியர்களையும் போரில் தோற்கடித்துத் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டான்.அது முதல் கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டு வரை துங்கபத்திரை ஆற்றின் தெற்கில் உள்ள நிலப்பகுதி முழுவதிலும் சோழப் பேரரசின் செல்வாக்கு ஓங்கியது. இம்மன்னன் தஞ்சையில் நிதம்பசூதனி ஆலயம் எடுத்தான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் தெரிவிக்கின்றன. விசயாலன் கி.பி 871 இல் இறந்தான்.

[தொகு]முதலாம் ஆதித்த சோழன் (கி.பி.871-907 )

விசயாலயனைத் தொடர்ந்து பதவிக்கு வந்தவன் ஆதித்தன். 'முதலாம் ஆதித்தன்' என்று அழைக்கப்படும் அரசியல் ஆற்றலும் போர்த்திறமும் மிக்க இவன் சோழநாட்டு எல்லைகளை விரிவாக்கினான். கி.பி.880-ல் பல்லவர்களிடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டியின் காரணமாக நிருபத்துங்க பல்லவனுக்கும் பல்லவன் அபராசிதனுக்கும் இடையே திருப்புறம்பியம் என்னும் ஊரில் போர் நிகழ்ந்தது. இப்போரில் அபராசிதனுக்கு முதலாம் ஆதித்தன், கங்க மன்னன் பிருதிவிபதி ஆகியோர் துணை நின்றனர். நிருபத்துங்க பல்லவனுக்கு பாண்டியன் வரகுணன் துணை நின்றான். இப்போரில் அபராசிதன் வெற்றிபெற்றான். பிருதிவிபதி மரணமடைந்தான். தோல்வியுற்ற பாண்டியன் தன் நாடு திரும்பினான். திருப்புறம்பியப் போர் சோழநாட்டின் எதிர்காலத்திற்குப் பெருந் திருப்பமாக அமைந்தது. இப்போரில் அபராசிதனுக்கு எதிராக நின்ற பாண்டியர்கள், வடக்குப் பாண்டி நாட்டிலிருந்து துரத்தப்பட்டனர். இவற்றை ஆதித்தன் கைப்பற்றினான். அபராசிதனும் சோழர்களுக்கு சில ஊர்களைப் பரிசாக அளித்தான். அக்காலத்தில் சோழ நாட்டின் பெரும்பகுதி பல்லவர் வசம் இருந்தது. மனம் கொதித்து அதை மீட்கும் முயற்சிகளில் ஆதித்தன் ஈடுபட்டான். பல்லவர் மீதும் படையெடுத்த ஆதித்த சோழன் அபராசித பல்லவனைக் கொன்று தொண்டை மண்டலத்தையும் சோழ நாட்டுடன் இணைத்தான். இவனுடைய அதிகாரம் கங்கர் நாட்டிலும், கொங்கு நாட்டிலும் பரவியிருந்தது. சேர நாட்டுடனும், இராட்டிரகூடருடனும், வேறு அயல் நாடுகளுடனும் நட்புறவைப் பேணிவந்த அவன் சோழர்களை மீண்டும் உயர்நிலைக்குக் கொண்டு வந்தான்.

[தொகு]முதலாம் பராந்தக சோழன் (கி.பி.907-955)

கி.பி 907 இல் முதலாம் ஆதித்த சோழனை அடுத்து அரசனானவன் பராந்தக சோழன். இக்காலத்தில் சோழப் பேரரசு வடக்கே காளத்தி முதல் தெற்கே காவிரி வரை பரவியிருந்தது. இவனும் போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டான். பாண்டியர்களுடன் போரிட்டு மதுரையைக் கைப்பற்றிக் கன்னியாகுமரி வரை பரந்த பாண்டிநாட்டை சோழநாட்டுடன் இணைத்துக் கொண்டான். இந்திய வரலாற்றில் முதன் முதலில் குடியுரிமை மற்றும் வாக்குச் சீட்டு ஆகியவற்றை அறிமுகம் செய்தவன் இவனே ஆவான்[4]. இவன் காலத்தில் குடவோலை முறையில் கிராம சபை உறுப்பினர், கிராம சபைகளைத் தேர்ந்தெடுக்கும் முறை, அமைக்கும் முறை, கிராம ஆட்சிமுறை பற்றிய விவரங்களை உத்திரமேரூரிலும் வேறு சில ஊர்களிலும் உள்ள கல்வெட்டுகள் புலப்படுத்துகின்றன. இவன் காலத்துக்குப் பின்னும் சோழர் ஆட்சி 300 ஆண்டுகள் வரை தொடர்ந்தது.

[தொகு]கண்டராதித்த சோழன் (கி.பி.950-951)

பிற்காலத்தில் இராட்டிரகூடருடன் ஏற்பட்ட போரில் அவனது மகன் இறந்ததைத் தொடர்ந்து சோழநாட்டின் விரிவு வேகம் தணியத் தொடங்கியது. இராட்டிரகூடர்ர்கள் சோழநாட்டின் சில பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டனர். பராந்தக சோழனின் இயலாமையாலோ வேறு காரணங்களினாலோ அவன் உயிருடன் இருந்தபோதே அவனது தம்பியான கண்டராதித்தன் கி.பி 950 -இல் சோழ மன்னனாகப் பட்டம் சூட்டிக்கொண்டான். ஆனாலும் இவனது ஆட்சியும் குறுகிய காலமே நிலைத்தது. இவன் காலத்தில், இராட்டிரகூடர் சோழ நாட்டின் வடபகுதிகளைக் கைப்பற்றிக் கொள்ள, பாண்டியர்களும் சோழர்களின் கட்டுப்பாட்டை ஏற்காது விட்டனர். சிவ பக்தனான கண்டராதித்தன் பாடிய பாடல்கள் ஒன்பதாம் திருமுறையில் இடம் பெற்றுள்ளன. இவன் மனைவி செம்பியன் மாதேவி எடுத்த கோயில்கள் சோழ நாட்டில் இன்னும் பல உள. இவன் காலத்தில் தொண்டை மண்டலம் முழுவதும் இராட்டிரகூடர்கள் ஆட்சிக்குட்பட்டிருந்தது.

[தொகு]அரிஞ்சய சோழன்

கண்டராதித்தனை அடுத்து அவன் தம்பி அரிஞ்சயன் சோழ அரசனானான். முதலாம் பராந்தக சோழனின் மூத்த மகனான இராசாதித்தன் திருக்கோவிலூரில் இராட்டிரகூட மன்னனை எதிர்க்கப் படையுடன் தங்கியிருந்த போது அவனுக்குத் துணைபுரிய இவனும் தங்கியிருந்த சிறப்புடையவன். இராட்டிர கூடன் கைப்பற்றிய தொண்டை நாட்டைத் தான் மீட்க முயற்சிகள் செய்தான். இடையில் சிறிது காலமே ஆட்சி புரிந்த அரிஞ்சய சோழனும் குறுகிய காலத்தில் போரில் மடிந்தான்.

[தொகு]சுந்தர சோழன்(கி.பி.957-973)

சோழ நாட்டின் இழந்த பகுதிகளை மீட்பதில் வெற்றி பெற்றவன் 957 இல் பட்டத்துக்கு வந்த சுந்தர சோழன் ஆவான். இவன் இராட்டிரகூடர்களைத் தோற்கடித்தது தொண்டை மண்டலத்தைக் கைப்பற்றியதுடன், பாண்டியர்களையும் வெற்றி கொண்டான். எனினும், பகைவர் சூழ்ச்சியால் பட்டத்து இளவரசனான, சுந்தர சோழனின் மூத்த மகன் ஆதித்த கரிகாலன் கொல்லப்பட்டான். ஆதித்த கரிகாலனின் பேரிழப்பால், சுந்தரசோழன் தன் இறுதிநாட்களில் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தான். 'பாண்டிய தலைகொண்ட கரிகாலச்சோழனை' கொலை செய்த குற்றத்திற்காகச் சிலருடைய சொத்துக்களைப் பறிமுதல் செய்து விற்கும் பணியினை மன்னன் கட்டளைப்படி திருவீர நாராயண சதுர்வேத மங்கலச் சபை மேற்கொண்டதாக, இராசகேசரி இரண்டாம் ஆண்டு உடையார்குடிக் கல்வெட்டு கூறுகிறது. இரண்டாம் ஆதித்தன் ஒரு சதியின் மூலம் கொலை செய்யப்பட்டான் என்பது இந்தக் கல்வெட்டால் தெளிவாகிறது.
அன்பில் எனும் ஊரைச் சேர்ந்த அநிருத்த பிரமாதிராசன் என்பவன் இவனுக்கு அமைச்சராய் இருந்தவன். கருணாகர மங்கலம் என்ற ஊரினை இறையிலியாக அவனுக்கு அளித்த செப்பேடுகளே அன்பில் செப்பேடுகள் ஆகும்.

[தொகு]உத்தம சோழன் (கி.பி.970-985)


உத்தம சோழன் காலத்து வெள்ளிக்காசு. இலங்கையில் கண்டெடுக்கப்பட்டது.
கி.பி 973 இல் சுந்தரசோழன் இறந்த பின்பு, அவன் மகன் இராசராசன் மன்னனாகவில்லை. கண்டராதித்தனின் மகனும் இராசஇராசனின் சிறிய தந்தையுமாகிய உத்தம சோழன் அரசுரிமை பெற்றான். இவனுக்கு முன்னமேயே கிடைத்திருக்கவேண்டிய அரசுரிமை நீண்ட காலம் மறுக்கப்பட்டிருந்ததாகவும் வேறு சில ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். இவன் காலத்தில் நாடு அமைதியுடன் இருந்தது. உத்தம சோழனின் செப்பேட்டிலிருந்து அக்காலத்தில் வரிவடிவில் இருந்த தமிழ் எழுத்துக்களின் தன்மையை அறியலாம். புலியுருவம் பொறித்து உத்தமசோழன் என்று கிரந்த எழுத்துகளைத் தாங்கிய நாணயம் இவன் காலத்து வரலாற்றுச் சான்றாகும்.

[தொகு]இராசராச சோழன் (கி.பி 985-1014)

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், 985 இல் உத்தம சோழன் இறந்தபின்னர், சுந்தர சோழனின் இரண்டாவது மகனான இராசராச சோழன் மன்னனானான். இவனுக்கு அருள்மொழிவர்மன், ரிசிவர்மன் என்று பெயர்கள் வழங்கப் பட்டதாக அழகர் கோவில் கல்வெட்டுகளில் இருந்து அறியப்படுகிறது. இவன் காலத்தில் சோழநாட்டின் வலிமை பெருகியது. நான்கு பக்கங்களிலும் சோழநாட்டின் எல்லைகள் விரிந்தன.

[தொகு]காந்தளூர்ச் சாலை


தஞ்சைப் பெரிய கோயிலின் விமானம்
இவற்றுக்காக இராசராசன் நடத்திய போர்கள் பல. சேரர்பாண்டியர், சிங்களவர், ஒன்று கூடி காந்தளூர்ச் சாலை என்ற இடத்தில் சோழரை எதிர்த்தனர். இப்போரில் சேர மன்னன் பாசுகர ரவிவர்மனைத் தோற்கடித்தான். சேர மன்னனுடைய கப்பற்படையை அழித்து உதகை, விழிஞம் ஆகிய பகுதிகளையும் வென்றான். இப்போரில், சேரருக்கு உதவுவதற்காகச் சென்ற பாண்டிய மன்னன் அமரபுயங்க பாண்டியனை வென்று, இவர்களுக்கு உதவிய இலங்கை மீதும் படைநடத்தி அதன் தலை நகரைக் கைப்பற்றினான். இலங்கைத் தீவின் வடபகுதி சோழ நாட்டுடன் இணைக்கப்பட்டது. கொல்லம் சென்று சேரனுடன் இரண்டாவது முறைப் போர் புரிந்து சேர நாட்டின் எஞ்சிய பகுதிகளையும் வென்றான்.

[தொகு]கங்கபாடி, நுளம்பாடி

சோழ நாட்டுக்கு வடக்கிலும், கங்கர்களைத் தோற்கடித்து கங்கபாடியைக் (மைசூரின்தென்பகுதியும் சேலம் மாவட்டத்தில் வட பகுதியும் அடங்கிய நாடு) கைப்பற்றினான். தலைக்காட்டைத் தலைநகராகக் கொண்டு கங்கர்கள் இந்நாட்டைஆண்டனர். மைசூர் நாட்டின் கீழ்ப்பகுதியும் பல்லாரி மாவட்டமும் கொண்ட நுளம்பாடியைப் பல்லவர்களின் வம்சத்தவராகிய நுளம்பர்களுடன் போரில் வென்று இப்பகுதியைக் கைப்பற்றினான். இப்போர்களில் தலைமை ஏற்று நடத்தியவன் இராசராசனின் மகனான முதலாம் இராசேந்திரன் ஆவான். சாளுக்கிய நாட்டின்மீதும் படையெடுத்து அதனைக் கைப்பற்றினான். துளுவர்,கொங்கணர்தெலுங்கர், இராட்டிரகூடர் ஆகியோரை வென்று வடக்கே வங்காளம் வரை இவனது படைகள் சென்று போர் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிகிறது.

சோழப் பேரரசின் எல்லைகள். கி. பி 1014

[தொகு]ஈழத்துப் போர்

இராசராசன் வலிமை மிக்கக் கடற்படையைக் கொண்டு இலங்கையை வென்றான் என திருவாலங்காட்டுச் செப்பேடுகள் புகழ்கின்றன. அப்போது ஐந்தாம் மகிந்தன் இலங்கை வேந்தனாக இருந்தான். சோழ நாட்டு மண்டலங்களில் ஒன்றாக மாறிய ஈழம் 'மும்முடிச் சோழ மண்டலம்' எனப் பெயர் பெற்றது. இலங்கையின் தலைநகராகத் திகழ்ந்த அநுராதபுரம் போரில் அழிந்தது. 'சனநாத மங்கலம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டு 'பொலன்னருவை' ஈழத்தின் புதிய தலைநகராயிற்று. இங்குள்ள ஒரு பௌத்த-விகாரையின் பெயர் ராசராச பெரும்பள்ளிராசராசசோழ மன்னனின் பெயரில் இது இருப்பது குறிப்பிடத்தக்கது. இதே பெயரில் தமிழ்நாட்டிலுள்ள நாகப்பட்டினத்தில் ஒரு புத்த விகாரை அக்காலத்தில் இருந்து வந்ததும் குறிப்பிடத்தக்கது. இராசேந்திரன் 'வானவன் மாதேச்சுரம்' என்ற பெயரில் இங்கு கற்றளி எடுத்தான். ஈழ மண்டலத்தில் உள்ள சில ஊர்களை தஞ்சைப் பெருவுடையார் ஆலயத்திற்கு நிவந்தமாக அளித்ததைக் கல்வெட்டுகள் கூறுகின்றன. சிறந்த கடற்படையைப் பெற்றிருந்த இராசராசன், தெற்கில் ஈழத்தின்மீது மட்டுமன்றி, இந்தியாவின் மேற்குக் கரைக்கு அப்பால், அரபிக்கடலிலுள்ள முந்நீர்ப் பழந்தீவு எனப்படும் இலட்சத்தீவுகள் மீதும், கிழக்குப் பகுதியில் தென்கிழக்காசியப் பகுதியிலுள்ள கடாரத்தின் மீதும் படையெடுத்ததாக இவன் காலத்திய செப்பேடு ஒன்று தெரிவிக்கிறது.

[தொகு]முதலாம் இராசேந்திர சோழன் (கி.பி.1012-1044)

இராசராசன் காலத்தில் இளவரசனாகப் பட்டம் சூட்டப்பெற்றவன் இராசேந்திர சோழன். இராசராசனின் மறைவுக்குப்பின், 1012-இல் அவனது மகனான இராசேந்திரன் சோழநாட்டின் மன்னனானான். ஏற்கனவே தந்தையோடு, போர் நடவடிக்கைகளிலும், நிர்வாகத்திலும் ஈடுபட்டு அனுபவமும் திறனும் பெற்றிருந்த இராசேந்திரன், ஆளுமை கொண்டவனாக விளங்கினான். இவனது ஆட்சியில் தற்போதைய தமிழ்நாடு,ஆந்திரகேரள மாநிலங்களையும் மைசூர் நாட்டின் ஒரு பகுதியையும் ஈழ நாட்டையும் உள்ளடக்கியதாக இருந்த சோழநாடு மேலும் விரிவடைந்தது.
சேர நாட்டின் மீது படையெடுத்து அதன் அரசனான பாசுகர ரவிவர்மனை அகற்றிவிட்டு, அந்நாட்டை சோழரின் நேரடி ஆட்சியின் கீழ் கொண்டுவந்தான். ஈழநாட்டின் மீதும் படையெடுத்து முழு நாட்டையும் கைப்பற்றியதுடன், தப்பி ஓடிய பாண்டியன் இலங்கையில் மறைத்து வைத்திருந்த பாண்டி நாட்டு மணிமுடியையும், செங்கோலையும் மீட்டு வந்தான்.

இராசேந்திர சோழன் காலத்தில் சோழநாடு. கி.பி 1030
வடக்கு எல்லையில், சாளுக்கியர்கள், கலிங்கர்களுடனும், ஒட்ட விசயர்களுடனும் சேர்ந்துகொண்டு சோழரை எதித்தனர். இதனால் சோழர் படைகள் வடநாடு நோக்கிச் சென்றன. சாளுக்கியர்கலிங்கர்ஒட்ட விசயர் ஆகியவர்களையும், பல சிற்றரசர்களையும் வென்று, வங்காள நாட்டையும் சோழர்படை தோற்கடித்தது. சோழர் கைப்பற்றியிருந்த இடங்களில் அடிக்கடி கிளர்ச்சிகள் ஏற்பட்டதாலும், வடக்கு எல்லையில் சாளுக்கியரின் தொல்லைகள் தொடர்ந்து வந்ததாலும், இராசேந்திரனின் ஆட்சிக்காலம் முழுவதும் அமைதியற்ற காலப்பகுதியாகவே கழிந்தது.
வடநாட்டை வென்று பெற்ற கங்கை நீரைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்ததன் நினைவாக கங்கை கொண்ட சோழீச்சுரம் என்னும் நகரை ஏற்படுத்தினான். இங்கு பெருவுடையார்க் கோவிலைப் போலவே கட்டப்பட்ட கோவில் சிற்பக்கலையின் பெருமிதத்தை விளக்குகிறது. தனது வெற்றியின் நினைவாக இங்கு 'சோழ கங்கை' என்ற பெரிய ஏரியினை வெட்டச் செய்தான் என்று செப்பேடுகள் கூறுகின்றன. இவன் காலத்தில் பாதுகாப்பு நோக்கங்களுக்காக நாட்டின் தலை நகரம், தஞ்சையிலிருந்து கங்கைகொண்ட சோழபுரத்துக்கு மாற்றப்பட்டது. தான் போரில் வென்ற நாடுகளுக்கு அரச குமாரர்களைத் தலைவர்களாக்கி ஆட்சியைத் திறம்படப் புரியும் முறையை முதலில் பின்பற்றியவன் இரசேந்திரனே ஆவான்.

[தொகு]பின்வந்த சோழ மன்னர்கள்

[தொகு]முதலாம் இராசாதிராசன்

இராசேந்திர சோழனுக்குப் பின் 1044 ஆம் ஆண்டில் அவனது மகன் முதலாம் இராசாதிராசன் அரசனானான். இவன் காலத்தில் சோழப் பேரரசின் தென் பகுதிகளான ஈழம், பாண்டிநாடு, சேரநாடு ஆகிய இடங்களில் கிளர்ச்சிகள் தீவிரம் அடையத் தொடங்கின எனினும், அவற்றை அவன் அடக்கினான். சாளுக்கியர்களில் தொல்லைகளை அடக்குவதற்காக அங்கேயும் சென்று போர் புரிந்தான். சோழர்கள் இறுதி வெற்றியைப் பெற்றனராயினும் கொப்பம் என்னுமிடத்தில் நடைபெற்ற சண்டையொன்றில் இராசாதிராசன் இறந்துபோனான்.

[தொகு]இரண்டாம் இராசேந்திரன்

இவனைத் தொடர்ந்து அவன் தம்பி 'இராசேந்திரன்' என்னும் அரியணைப் பெயருடன் முடி சூட்டிக்கொண்டான். இவன் இரண்டாம் இராசேந்திரன் எனப்படுகின்றான். கொப்பத்துப் போரில் தன் அண்ணன் மாண்டதும் படை நடத்திப் பகைவர்களை வென்றான். இவனது மகள் மதுராந்தகி பிற்காலத்தே குலோத்துங்கன் என்றழைக்கப்பட்ட இரசேந்திரனுக்கு மணம் முடித்து வைக்கப்பட்டாள். இவள் தஞ்சை பெரிய கோவிலில் இராசராசேச்சுவர நாடகம் நடத்த ஆண்டுக்கு 120 கலம் செல் நிவந்தமாக அளித்ததாகக் கல்வெட்டு கூறுகிறது.

[தொகு]பிற மன்னர்கள்

இவனுக்குப் பின்னர் இவன் தம்பி வீரராசேந்திரனும், பின்னர் அவன் மகனான அதிராசேந்திரனும் வரிசையாகப் பதவிக்கு வந்தனர். அதிராசேந்திரன் அரசனான சிலமாதங்களிலேயே நோய்வாய்ப்பட்டு இறந்து விட்டதாகச் சொல்லப்படுகின்றது. சந்ததி இல்லாமலேயே அதிராசேந்திரன் இறந்து போனதால், தந்தை வழிசாளுக்கிய - தாய்வழியில் சோழர் மரபில் வந்த இளவரசன் ஒருவன் குலோத்துங்கன் என்னும் பெயருடன் சோழப் பேரரசின் மன்னனானான். இது, பிற்காலச் சோழர் மரபுவழியை நிறுவிய விசயாலய சோழனின் நேரடி வாரிசுகளின் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.

[தொகு]சாளுக்கிய சோழர்கள்


குலோத்துங்க சோழன் காலத்துச் சோழ நாடு கி.பி 1120

[தொகு]முதலாம் குலோத்துங்கன் கி.பி.1070-1120

இராசராசசோழனின் மகளான குந்தவையின் மகனுக்கும் முதலாம் இராசேந்திரனின் மகள் அம்மங்கா தேவிக்கும் பிறந்தவன் குலோத்துங்கன். மேலைச் சாளுக்கிய ஆதிக்க விரிவை எதிர்த்து வீரராசேந்திரன் போர் புரிந்த போதும் கடாரத்துக்குச் சோழப்படை சென்ற போதும் குலோத்துங்கன் அதில் பங்கு கொண்டிருந்தான். குழப்பம் மிகுந்து அரசனில்லாது சோழ நாடு தவித்தபோது அரசனாகி ஐம்பது ஆண்டுகள் சோழ நாடு சிதையாமல் காத்தவன் முதலாம் குலோத்துங்க சோழன்.
முதலாம் குலோத்துங்கனுடைய காலமும் பெரும் கிளர்ச்சிகளைக் கொண்ட காலப்பகுதியாகவே அமைந்தது. பாண்டிய நாட்டிலும், சேர நாட்டிலும் படை நடத்திக் கிளர்ச்சிகளை அடக்கவேண்டியிருந்தது. வட பகுதிகளிலும் போர் ஓய்ந்தபாடில்லை. எனினும் ஈழநாட்டில், விஜயபாகு என்பவன் சோழருடன் போரிட்டு ஈழத்திலிருந்து சோழர் ஆட்சியை அகற்றினான். ஈழத்தில், ஏறத்தாழ 70 ஆண்டுகள் நிலவிய சோழராட்சி அங்கிருந்து அகற்றப்பட்டது. சோழநாட்டின் பிற பகுதிகளில் நிலவிய நிலைமைகளைக் கருத்திற்கொண்டு, குலோத்துங்கன் ஈழநாட்டை மீட்கப் படைகளை அனுப்பவில்லை என்று கருதப்படுகின்றது.
குலோத்துங்கன் இயன்ற வரை பயனற்ற போரை ஒதுக்கினான். இராசராச சோழன் கைப்பற்றிய நாடுகள் அந்நாட்டு மன்னர்களின் முயற்சியாலும் குலோத்துங்கனின் அமைதிக் கொள்கையாலும் சோழர் கையை விட்டு நழுவின. குலோத்துங்கனின் இறுதிக் காலத்தில் தெற்கிலிருந்தும் வடக்கிலிருந்தும் பிரச்சினைகள் உருவாயின. சோழப் பேரரசு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டது. வடக்கிலிருந்து வந்த படையெடுப்புகள் சோழநாட்டுக்குப் பெரும் சேதத்தை விளைவித்தன.

[தொகு]வெளிநாட்டுத் தொடர்புகள்

முதலாம் இராசராசன்மற்றும் முதலாம் இராசேந்திரன் காலங்களிலேயே சீன நாட்டுடன் சோழ நாட்டிற்குத் தொடர்பு இருந்து வந்தது. குலோத்துங்கனும் தன் ஆட்சிக் காலத்தில் வாணிகத் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள 72 பேர்களடங்கிய ஒரு தூதுக் குழுவை சீனத்திற்கு அனுப்பிவைத்தான்[5] மேலும் கடாரம்சுமத்திரா போன்ற தீவுகளுடனும் வாணிகத் தொடர்பு கொண்டிருந்தான்.

[தொகு]ஆட்சிப் பணிகள்

குலோத்துங்க சோழனின் ஆட்சியின் போது வரியை நீக்கினான். எனவே சுங்கம் தவிர்த்த சோழன் என அழக்கப்பட்டான்.[6].இராசராசனின் ஆட்சிக்குப்பின் இவனது ஆட்சிக் காலத்தில் சோழ நாடு முழுவதையும் அளக்கும் பணி தொடங்கி இரு ஆண்டுகளில் முடிவுற்றது. நிலமளந்த செயல் இவனது ஆட்சிக் காலத்தில் நிகழ்ந்த மற்றொரு சிறப்பான செயலாகும். இவன் சைவ சமயத்தைச் சேர்ந்தவனாக் இருந்த போதும் வைணவ, சமண, பௌத்த சமயங்களையும் ஆதரித்ததாகக் கல்வெட்டு கூறுகின்றது. குலோத்துங்கனது அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர் செயங்கொண்டார். இவர் குலோத்துங்கனின் கலிங்க வெற்றியைப் புகழ்ந்து கலிங்கத்துப் பரணி இயற்றினார்.

[தொகு]சோழப் பேரரசின் வீழ்ச்சி

முதலாம் குலோத்துங்கனுக்குப் பின்னர் அவனது மகனான விக்கிரம சோழன், இரண்டாம் குலோத்துங்கன், இரண்டாம் இராசராசன், இரண்டாம் இராசாதிராசன், மூன்றாம் குலோத்துங்கன் ஆகியோர் வரிசையாகச் சோழ நாட்டை ஆண்டனர். இக்காலத்தில் சோழர் தொடர்ந்து வலிமையிழந்து வந்தனர். நாட்டின் வடக்கில் ஒய்சாளர்களின் செல்வாக்கு உயர்ந்தது. குறுநில மன்னர்களும் ஆதிக்கம் பெற நேரம் பார்த்திருந்தனர். தெற்கே பாண்டியர்கள் வலிமை பெறலாயினர். உள்நாட்டுக் குழப்பங்களும் விளைந்தன.
1216 இல் ஆட்சிக்கு வந்த மூன்றாம் இராசராசன் காலத்தில் மாறவர்மன் சுந்தரபாண்டியன் தலைமையில் பாண்டியர்கள் கங்கைகொண்ட சோழபுரம் மீது படையெடுத்து அதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும், சோழர்களுக்கு ஆதரவாகப் போசள மன்னனான இரண்டாம் நரசிம்மன் சோழநாட்டில் புகுந்து பாண்டியர்களைத் தோற்கடித்து மன்னனைக் காப்பாற்றினான். மூன்றாம் இராசராசனுக்குப் பின்னர் கி.பி 1246 இல் மூன்றாம் இராசேந்திரன் மன்னனானான். இவன் காலத்தில் வலிமை பெற்ற பாண்டியர்கள் சோழர்களை வென்று அவர்களைச் சிற்றரசர்கள் நிலைக்குத் தாழ்த்தினர். மூன்றாம் இராசராசனுடன் பிற்காலச் சோழரின் பெருமை மங்கிப்போயிற்று.
அரசன் பெயர்ஆட்சியாண்டுகள்(கி.பி)தந்தைதலைநகரம்
விசயாலய சோழ வம்சம்
விசயாலய சோழன்848-871சுராதிராஜன்[7]தஞ்சாவூர்
ஆதித்த சோழன்871-907விசயாலய சோழன்தஞ்சாவூர்
முதலாம் பராந்தக சோழன்907-950ஆதித்த சோழன்தஞ்சாவூர்
கண்டராதித்த சோழன்950-955முதலாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன்தஞ்சாவூர்
அரிஞ்சய சோழன்956-957முதலாம் பராந்தக சோழனின் மூன்றாவது மகன்தஞ்சாவூர்
இரண்டாம் பராந்தக சோழன்957-973அரிஞ்சய சோழன்தஞ்சாவூர்
ஆதித்த கரிகாலன்957-969இரண்டாம் பராந்தக சோழனின் மூத்த மகன்காஞ்சிபுரம்
உத்தம சோழன்970-985கண்டராதித்த சோழன்தஞ்சாவூர்
முதலாம் இராசராச சோழன்985-1014இரண்டாம் பராந்தக சோழனின் இரண்டாம் மகன்தஞ்சாவூர்
முதலாம் இராசேந்திர சோழன்1012-1044முதலாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
முதலாம் இராசாதிராச சோழன்1018-1054முதலாம் இராசேந்திர சோழனின் மூத்த மகன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசேந்திர சோழன்1051-1063முதலாம் இராசேந்திர சோழனின் இரண்டாவது மகன்கங்கைகொண்ட சோழபுரம்
வீரராசேந்திர சோழன்1063-1070இரண்டாம் இராசேந்திர சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
அதிராசேந்திர சோழன்1070வீரராசேந்திர சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
சாளுக்கிய சோழர்கள்
முதலாம் குலோத்துங்க சோழன்1070-1120முதலாம் இராசேந்திர சோழனின் மகள் வழிப் பேரன்கங்கைகொண்ட சோழபுரம்
விக்கிரம சோழன்1118-1136முதலாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் குலோத்துங்க சோழன்1133-1150விக்கிரம சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசராச சோழன்1146-1163இரண்டாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
இரண்டாம் இராசாதிராச சோழன்1163-1178இரண்டாம் இராசராச சோழனின் ஒன்றுவிட்ட சகோதரன்கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் குலோத்துங்க சோழன்1173-1218இரண்டாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராசராச சோழன்1216-1256மூன்றாம் குலோத்துங்க சோழன்கங்கைகொண்ட சோழபுரம்
மூன்றாம் இராசேந்திர சோழன்1246-1279மூன்றாம் இராசராச சோழன்கங்கைகொண்ட சோழபுரம்

[தொகு]சோழ நாடு

தமிழ் மரபுகளின்படி பண்டைய சோழ நாடு தற்காலத் தமிழ் நாட்டின் திருச்சிராப்பள்ளி மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களை உள்ளடக்கியிருந்தது. சோழநாடு, கடலை நோக்கிச் சரிந்து செல்கின்ற ஆனால் பொதுவாக, மட்டமான நில அமைப்பைக் கொண்டது. காவிரி ஆறும், அதன் கிளை ஆறுகளுமே சோழ நாட்டின் நிலத் தோற்றத்தின் முக்கியமான அம்சங்கள். பொன்னி என்றும் அழைக்கப்படுகின்ற காவிரி ஆற்றுக்குச் சோழநாட்டின் பண்பாட்டில் சிறப்பான இடம் இருந்தது. ஆண்டுதோறும் பொய்க்காது பெருகும் காவிரி வெள்ளம் சோழ நாட்டு மக்களுக்கு ஒரு விழாவுக்கான ஏதுக்களில் ஒன்றாக இருந்தது. ஆண்டு தோறும் கொண்டாடப்பட்ட ஆடிப்பெருக்கு விழாவில் அரசர்கள், ஆண்டிகள் எல்லோருமே பங்கு பெற்றனர்.
உறையூர் கி.பி 200 ஆம் ஆண்டுக்கு முன் சோழரின் தலை நகரமாக விளங்கியது. அகழிகளாலும், மதிலாலும் சூழப்பட்ட பாதுகாப்பான நகரமாக இது விளங்கியது. காவேரிப்பட்டினம் என்றும் அழைக்கப்பட்ட காவிரிப்பூம்பட்டினம் காவிரிக்கழிமுகத்துக்கு அண்மையில் அமைந்திருந்த ஒரு துறைமுக நகராகும். தொலமியின் காலத்திலேயே காவிரிப்பூம் பட்டினமும், நாகபட்டினமும் சோழநாட்டின் முக்கிய துறைமுக நகரங்களாகப் பெயர் பெற்றிருந்தன. இந்நகரங்களில் பல இன மக்கள் வாழ்ந்தனர். இவை வணிக மையங்களாக விளங்கிப் பல மதத்தவரையும் கவரும் இடங்களாக இருந்தன. பண்டைய ரோமர்களின் கப்பல்களும் இந்தத் துறைமுகங்களுக்கு வந்தன. கிறித்து சகாப்தத்தின் தொடக்க காலங்களைச் சேர்ந்தரோமானிய நாணயங்கள் பல காவிரியின் கழிமுகப் பகுதிகளில் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
சோழ நாட்டின் இன்னொரு முக்கிய நகரம் தஞ்சாவூர் ஒன்பதிலிருந்து பதினொன்றாம் நூற்றாண்டு வரை சோழப்பேரரசின் தலைநகரமாக விளங்கியது. விசயாலய சோழன் தஞ்சையைத் தன் தலைநகரமாகத் தேர்ந்தெடுத்து வெற்றிகள் பல பெற்றான். பல்லவ நாட்டைக் கைப்பற்றிய பிறகு காஞ்சியை இரண்டாம் தலைநகரமாகக் கொண்டு அவ்வப்போது சோழ அரசர்கள் அங்கிருந்தும் ஆட்சிப்பொறுப்பை கவனித்துவந்தனர். எனினும் தஞ்சையே முக்கிய நகரமாக விளங்கியது. சிறிது காலத்திற்குப் பின் தஞ்சை அதன் முதன்மை இடத்தை இழந்தது. இராசராசனின் மகன் முதலாம் இராசேந்திரன் கங்காபுரி என்ற புதியதோர் நகரை உருவாக்கி அதைத் தன் தலை நகராகக் கொண்டான். பின்னர் பதினொன்று முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு வரை கங்கைகொண்ட சோழபுரம் தலைநகரமாக இருந்தது. 'சோழ கங்கம்' என்ற அழகிய பெரிய ஏரியைக் கொண்ட இந்நகர் பல நூற்றாண்டுகளாய் இராசேந்திரனின் பெருநோக்குக்கும் பெருமைக்கும் சின்னமாய் விளங்கி இருந்தது.
கும்பகோணத்தை அடுத்துள்ள பழையாறையில் ஒரு அரண்மைனையும், முதலாம் இராசராசனுடைய பெயரிலேயே "அருள்மொழி தேவேச்சுரம்" என்ற கோவிலும் இருந்தது. இந்த அரண்மனையில் இராசராசனின் தமக்கை குந்தவை பல காலம் விரும்பித் தங்கியிருந்தாள் என்றும் இராசராசனும் சிலகாலம் தங்கியிருந்ததாகவும் கல்வெட்டுக் குறிப்புகள் கூறுகின்றன. முதலாம் இராசேந்திரன் மதுரையில் மிகப் பெரியதோர் அரண்மனை கட்டியதும் தவிர உத்திரமேரூர் போன்ற இடங்களிலும் சோழர் அரண்மனைகள் இருந்ததாக கல்வெட்டுக்களில் இருந்து அறிகிறோம். சாளுக்கிய சோழர்களின் காலத்தில், சிதம்பரம்மதுரைகாஞ்சிபுரம் ஆகியவையும் மண்டலத் தலை நகரங்களாக விளங்கின.
முத்தொள்ளாயிரத்தில் வரும் ஒரு பாடல் சோழரின் ஆட்சிப் பரப்பை கூறுகிறது.
"கச்சி ஒரு கால் மிதியா ஒரு காலால்
தத்து நீர்த் தண்ணுஞ்சை தான் மிதியா
பிற்றையும் ஈழம் மிதியா வருமே எம்
கோழியர் கோக்கிள்ளிக் களிறு"

[தொகு]சோழர் ஆட்சி

சோழர் ஆட்சியில் ஆட்சிமுறை, கட்டிடக் கலை, இலக்கியம்இசைசிற்பம்நாடகம்ஊராட்சி ஆகியவை சிறந்த நிலையில் இருந்தது. நிர்வாக மற்றும் செயலாக்க நடவடிக்கைகளில் அரசனுக்கு உதவுவதற்காக வலுவான அதிகார அமைப்பு இருந்தது. நிர்வாகம், நீதி வழங்கல், வரி விதித்தல், பாதுகாப்புப் போன்றவற்றில் ஆலோசனைகள் கூற அமைச்சர்கள் இருந்தனர். தற்காலத்தில் இருப்பது போல சட்டசபையோ, சட்டவாக்க முறைமையோ இல்லாதிருந்ததால், அரசன் நீதியாகச் செயற்படுவது, தனிப்பட்ட அரசர்களின் நற்குணங்களிலும், அறவழிகளின்மீது அவனுக்கிருக்கக்கூடிய நம்பிக்கையிலுமே தங்கியிருந்தது.

[தொகு]ஆட்சிப் பிரிவுகள்

சோழ அரசு ஒன்பது மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. சோழ அரசின் சிறிய பிரிவு கிராமம். இது ஊர் எனப்பட்டது.கிராமங்கள் பல கொண்டது நாடு. இது கோட்டம் அல்லது கூற்றம் எனப்படும். நாடுகள் பல கொண்டது வளநாடு. வளநாடுகள் பல கொண்டது ஒரு மண்டலம் ஆகும். ஒவ்வொரு மண்டலமும் ஒன்பது வளநாடுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தன.

[தொகு]படைகள்

கடல் கடந்த நாடுகளையும் கைப்பற்றியவர்கள் சோழர்கள். எனவே சோழப்பேரரசில் ஆற்றல் மிக்க தரைப்படை, யானைப்படை, குதிரைப்படைகளுடன், கப்பற்படையும் இருந்தன. படையின் ஒவ்வொரு பிரிவுக்கும் தனித்தனிப் பெயர்கள் இருந்தன. முதலாம் இராசராசன்முதலாம் இராசேந்திரன் காலத்தில் 'மூன்றுகை மகாசேனை' என்ற ஒரு சிறப்புப் படையும் இருந்தது. இதுவே பல உள்நாட்டு வெளிநாட்டு வெற்றிகளை ஈட்டியது.
"முத்தமிழரசரிடமும் யானைப்படை மிகுதியாயிருந்தது. சோழவேந்தனிடம் அறுபதினாயிரம் யானைகள் இருந்ததாக ஒரு சீன வழிப்போக்கன் கூறியிருப்பதால், யானை இயல்பாகக் கூட்டங் கூட்டமாய் வாழும் குடமலைத் தொடரையுடைய சேரனிடத்தும் பாண்டியனிடத்தும், அவை எத்துணைப் பெருந்தொகையினவாய் இருந்திருத்தல் வேண்டும் என்பதை ஊகித்துணர்ந்து கொள்ளலாம்."

[தொகு]சமூகநிலை

[தொகு]சோழரும் சாதியமும்

சோழர்கள் சாதிய அடுக்கமைவையும் அமைப்பையும் ஏற்று, அதற்கு கட்டுப்பட்டு ஆட்சிபுரிந்தார்கள். இவர்கள் காலத்துக்கு முன்னரேயே தீட்டுக் கோட்பாடு தமிழ்ச் சமூகத்தில் வழங்கியதானாலும், இதை அமுல்படுத்துவதில் சோழரின் பங்கும் குறிப்பிடத்தக்கது. "முதலாம் இராசராசனுடைய கல்வெட்டொன்று 'தீண்டாச்சேரி' என ஒரு ஊர்ப் பகுதியைச் சுட்டுகிறது என்றும், பாகூரில் உள்ள திருமூலநாதர் திருக்கோவில் கல்வெட்டொன்று (முதலாம் இராசராசன் காலத்தைச் சேர்ந்தது - கி.பி. 10 ஆம் நூற்றாண்டு) ஓர் ஊரில் வாழ்ந்த ஒரு மக்கள் பிரிவினரைத் 'தீண்டாதார்' எனக் குறிப்பிடுகின்றது என்றும் பேராசிரியர் கோ. விசயவேணுகோபால் விளக்குகிறார். மேலும் சோழர் காலத்தில்தான் இந்தத் தீண்டத்தகாதவர் 'சேரிகள்', அரசாணையின்படி அமைக்கப்பட்டுள்ளன. மேடான இடத்தில் மேல் சாதியினரும் பள்ளமான இடத்தில் கீழ்ச் சாதியினரும் குடியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் முற்றத்தில் வரும் மழைத்தண்ணீர் கூடத் தீட்டுப்படாததாய் இருக்கும். மேலும் குனிந்து போகும்படியாகத்தான் குடிசை கட்ட வேண்டும். ஜன்னல் வைத்துக் கட்டக் கூடாது. சுவருக்கு வெள்ளையடிக்க கூடாது. பிணத்தைச் சும்மாதான் எடுக்க வேண்டும். பொதுக் குளத்தில் தண்ணீர் எடுக்கக்கூடாது. என்றெல்லாம் ஆணை போட்டு" அமுல்படுத்தியிருப்பதாகத் தெரிகிறது. இந்த ஆணைகள் அக்காலத்தில் நிலவிய அடக்குமுறைகளை எடுத்துக்காட்டுவதாக ஆய்வாளர் கூறுகிறார்கள்.[9] பிராமணர்களே சோழ நிர்வாகத்தின் முக்கியமான பதவிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தனர். மற்றவர்கள் அவர்களுக்கு வேலை செய்தார்கள். பிராமணர்கள் அல்லாதோர் ஒன்றாக செயல்படுவதை தடுப்பதற்கு சாதிச் சார்பையும், சாதி ஒற்றுமையையும், சாதி சமூகங்களையும் பிராமணர்கள் ஊக்குவித்தார்கள்.[10]

[தொகு]பெண்டிர்

சமூக வாழ்வில் முழுப்பங்கும் ஏற்க பெண்களுக்கு எவ்விதத் தடையும் இல்லை. ஆனால் அடக்கமே, பெண்களின் தலைசிறந்த அணிகலனாகக் கருதப்பட்டது. பொதுவாக சொத்து வைத்துக் கொள்வதற்கும் அந்தத் சொத்துக்களைத் தாங்கள் விரும்பியபடி அனுபவித்து வரவும் அவர்களுக்கு உரிமை இருந்துவந்தது. அரசர்கள் மீது அரச குடும்பத்துப் பெண்களுக்கு மிகுந்த செல்வாக்கு இருந்தது. அரசர்களும் செல்வந்தர்களும் பல மனைவியரைத் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பொதுவாக ஓர் ஆடவனுக்கு ஒரு மனைவி என்ற நியதியே பெருவாரியாக நடைமுறையில் இருந்து வந்தது. சிறந்த பயிற்சி தேவைப்படாத வேலைகளில் பெண்கள் அமர்த்தப்பட்டனர்.[11]

[தொகு]உடன்கட்டை ஏறுதல்

கணவரை இழந்த பெண் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறுவதைப் பற்றி சில கல்வெட்டுகளில் குறிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சோழநாட்டில் இத்தகைய நிகழ்ச்சிகள் மிகக் குறைவாகவே நடந்தன. இது பரவலான வழக்கமாக இல்லை. முதலாம் பராந்தகன் ஆட்சிக் காலத்தில், வீரச் சோழ இளங்கோவேள் என்ற கொடும்பாளூர்ச் சிற்றரசனின் மனைவி கங்கா தேவியார் என்பவள் தீக்குளிக்குமுன் ஒரு கோயிலில் நந்தா விளக்கேற்ற நிவந்தங்கள் கொடுத்தாள் என்று கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இராசராச பேரரசனின் தாயாரும் சுந்தர சோழனின் மனைவியுமான வானவன் மாதேவியார் உடன்கட்டை ஏறிய செய்தி திருவாலங்காட்டுச் செப்பேட்டில் குறிக்கப்பட்டிருக்கிறது. வீரமிக்க இந்தச் செயலுக்காக, மக்கள் வானவன் மாதேவியாரைப் போற்றி வழிபட்டார்கள் என்றாலும் பின்பற்றவில்லை என்றே தெரியவருகிறது. வேறு எந்த சோழ அரசியும் உடன்கட்டை ஏறவில்லை. பொதுவாகப் பெண்கள் உடன்கட்டை ஏறும் முறைக்கு மக்களிடையே ஆதரவு இல்லாமல் இருந்தது அந்தக் காலத்தில் உடன் கட்டை ஏறத் துணிந்தவர்களை தடுத்தவர்களைப் கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.[12]

[தொகு]ஆடல் வல்லார்

சோழர் காலத்தில் ஆடலும் பாடலும் ஓங்கியிருந்தன.ஆடல் மகளிர் பிறரைக் கவரும் வகையில் திகழ்ந்தனர். பரதத்திலும் இசையிலும் நல்ல தேர்ச்சி பெற்று, திருக்கோயில்களில் தொண்டு புரிந்தாள். தான் விரும்பியவரை மணம் புரிந்து கொண்டாள். இவ்ர்களுக்குச் சமூகத்தில் மிகவும் மரியாதையும் சிறப்பும் வழங்கப்பட்டது. கோவில் நடனமாடும் கலை வளர்ச்சிக்கு தங்கள் உயிர்களை அர்ப்பணித்த அக்காலத்திய தேவரடியார்கள், கிரேக்க நாட்டு ஆடற் பெண்டிர் போன்ற பண்புநலன் உள்ளவர்களாயும் கலையுணர்வு உடையவர்களாயும் திகழ்ந்தனர். கலை நுணுக்கங்களில் ஈடுபாடு உள்ளவர்களுக்கு கண்ணுக்கும் செவிக்கும் நல் விருந்தளித்தனர். திருக்கோயில்களில் இறைத் தொண்டிற்காகவே பலர், தங்கள் வாழ்நாளையெல்லாம் அர்ப்பணித்துக் கொண்டனர். அவர்களது வருவாயில் பெரும்பங்கு கோயில் வழிபாடு முதலிவற்றிற்காகவே செலவிடப்பட்டது என்று பின்னே வந்த முகமதிய எழுத்தாளர்கள் வியப்புடன் தெரிவிப்பதில் அறியலாம்.
சோழர் காலத்தில் தேவரடியார்கள் மதிப்பான இடம் பெற்றிருந்தனர் என்பது, சோழர் அவர்களுக்கு வழங்கியுள்ள ஏராளமான கொடைகளைப் பற்றிய கல்வெட்டுக்களைப் பார்த்தால் விளங்கும். இவர்கள் மணவாழ்க்கையிலும் ஈடுபட்டிருந்தனர். சதுரன் சதுரி என்னும் ஒரு தேவரடியாள் நாகன் பெருங்காடான் என்பவரின் மனைவி(அகமுடையாள்) என்று திருவொற்றியூர்க் கல்வெட்டு, கி.பி. 1049-ம் ஆண்டில் கூறுகிறது. அவ்வாறே தஞ்சை மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலில் பணிபுரிந்த தேவரடியாள் மணமானவள் என்பதை மூன்றாம் குலோத்துங்கன் கல்வெட்டு தெரிவிக்கிறது.

[தொகு]அடிமைகள்

சோழர்காலத்தில் அடிமை முறை வழக்கத்தில் இருந்தது. அடிமைகளாகவே சிலர் வாழ்ந்துள்ளனர். சிலர் வரிகட்ட முடியாமல் தங்களைத் தாங்களே விற்றுக் கொண்டனர். தலைமுறை தலைமுறையாகப் பணி செய்யவும் சிலர் விற்கப்பட்டனர். போரில் சிறைபிடிக்கப்பட ஆன்களும் பெண்களுமே பெரும்பாலும் பணியாளர்களாக அமர்த்தப்பட்டனர். போரிட்டு வென்ற வேற்று நாட்டிலிருந்து கொணர்ந்த பெண்கள் வேளம் என்ற மாளிகையில் குடியமர்த்தப்பட்டனர். சோழர்கள் வேளத்தில் (palace establishments) நூற்றுக்கணக்கான பெண்கள் அரசனினின் பாலியல் மற்றும் களியூட்டல் பயன்பாட்டுக்காக இருந்தார்கள். இங்கு ஆண் அடிமைகளும் வேலை செய்தார்கள். இதை பேராசிரியர் தாவுத் அலி அவர்கள் தனது "சோழர் காலக் கல்வெட்டுக்களில் வேழம் என்னும் சொல் பற்றிய ஆய்வு"[13] என்ற ஆய்வுக்கட்டுரையில் விளக்கியுள்ளார்.
ரொமிலா தபார் (Romila Thapar) என்று வரலாற்று அறிஞர் இந்தியாவின் வரலாறு (A History of India) என்ற தனது நூலில் சோழர்கள் அடிமைகள் வைத்திருந்ததைக் குறிப்பிட்டுள்ளார். அடிமைகள் தாமாகவோ அல்லது பிறராலோ அடிமைத்தனத்துக்கு விற்கப்பட்டார்கள். கோயில்களுக்கும் அடிமைகள் விற்கப்பட்டனர். பட்டினிக் காலத்தில் இது பெருமளவில் இருந்தது என்றும் குறிப்பிடுகின்றார். அடிமைகளின் எண்ணிக்கை சிறியது என்றும், பாரிய உற்பத்திகளுக்கு அடிமைகள் பயன்படுத்தப்பட்டதாக தெரியவில்லை என்றும் அவர் குறிப்பிடுகின்றார். [14]

[தொகு]சோழரின் வாணிகம்

சோழர்கள் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகத்தில் சிறந்து விளங்கினர். சீனாவின் சோங் (Song) வம்சத்தின் குறிப்பொன்று, சோழ வணிகக் குழுவொன்று, கி.பி 1077 ஆம் ஆண்டில், சீன அரசவைக்குச் சென்றது பற்றிக் கூறுகின்றது. சுமத்ராத்தீவில் கண்டெடுக்கப்பட்ட தமிழ் சாசனப் பகுதியொன்று, சோழநாட்டு வணிகக் கணங்களில் ஒன்றாகிய நானாதேச திசையாயிரத்து ஐந்நூற்றுவர் பற்றிக் குறிப்பிடுகின்றது. இது 1088 ஆம் ஆண்டைச் சேர்ந்ததாகும். இச் சாசனத்தின் கண்டுபிடிப்பு, சோழர் காலக் கடல்கடந்த வணிக முயற்சிகளுக்குச் சான்றாக அமைகின்றது.

[தொகு]சோழர்காலப் பண்பாட்டு அம்சங்கள்


பதினோராம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால வெண்கலச்சிலை. சிவனின்அர்த்தநாரீசுவரர் தோற்றம்.
சோழர் காலத்தில் கலைஇலக்கியம்சமயம் முதலிய துறைகளில் பெரு வளர்ச்சி காணப்பட்டது. இத்துறைகள் எல்லாவற்றிலுமே பல்லவர் காலத்தில் தொடங்கப்பட்ட போக்குகளின் உச்ச நிலையாகச் சோழர் காலம் அமைந்தது எனலாம். சோழர் காலத்தை தமிழரின் செவ்வியல் காலம் (classical age) என்றும் குறிப்பிடப்படுவதுண்டு. எனினும் சங்க காலமே தமிழரின் செவ்வியல் காலம் என்ற கருத்தும் இருக்கின்றது. பாரிய கோயில் கட்டிடங்களும், கற் சிற்பங்களும், வெண்கலச் சிலைகளும், இந்தியாவில் முன்னெப்பொழுதும் இல்லாத அளவுக்கு நுண்கலைத் திறன் வாய்ந்தவையாக அமைந்தன. சோழருடைய கடல் வலிமையும், வணிகமும், அவர்களுடைய பண்பாட்டுத் தாக்கங்களை பல நாடுகளிலும் உண்டாக்கக் காரணமாயிற்று. தற்காலத்தில் தென்கிழக்காசியாவின் பல பகுதிகளிலும் எஞ்சியுள்ள இந்துப் பண்பாட்டுச் செல்வாக்குக்கான எடுத்துக்காட்டுகளில் பல சோழர் விட்டுச் சென்றவையே.

[தொகு]கலைகள்

சோழர்காலத்தில் கட்டிடக் கலை சிறப்புற்றிருந்தது. சோழர்களின் நகரம், உள்ளாலைபுறம்பாடி என்ற இரு பிரிவாக இருந்தது. நகரங்கள் மிகப்பெரியவை. பல மாடிவீடுகள் கொண்டவை. இன்ன இடத்தில் இன்ன வகையான வீடுகள் தான் கட்டலாம் என்றும், இன்னவர்கள் இத்தனை மாடிகளுடன்தான் வீடுகள் கட்ட வேண்டும் என்றும் விதிகள் இருந்தன. பல அங்காடிகள் இருந்தன. இவர்களின் கட்டடக்கலை உன்னதத்தை விளக்குவன சோழர் அமைத்த கோவில்களே ஆகும். சோழர்காலக் கட்டிடக்கலை, பல்லவர்கள் தொடக்கிவைத்த பாணியின் தொடர்ச்சியே ஆகும். விசயாலயன் காலத்திலிருந்தே சோழர்கள் பல கோயில்களைக் கட்டினார்கள் ஆனால், முதலாம் இராசராசனுக்கு முந்திய சோழர் காலக் கட்டிடங்கள் பெரியவையாக அமையவில்லை. பேரரசின் விரிவாக்கம் சோழநாட்டின் நிதி நிலைமையிலும், ஏனைய வளங்கள் தொடர்பிலும் வளர்ச்சியை ஏற்படுத்தியதால், இராசராசன் காலத்திலும் அவன் மகனான இராசேந்திர சோழன் காலத்திலும், தஞ்சைப் பெரிய கோயில் மற்றும் கங்கை கொண்ட சோழபுரம் கோயில் போன்ற, அளவிற் பெரிய கோயில்களைக் கட்ட முடிந்தது. கி.பி 1009 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட தஞ்சைப் பெரிய கோயில், சோழர்கள் காலத்தில் அடைந்த பொருளியல் மேம்பாட்டுக்கான பொருத்தமான நினைவுச் சின்னமாகும்.

தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயில், கி.பி 1200
சோழர் காலம், கல்லாலும் வெண்கலத்தாலும் ஆக்கப்பட்டச் சிலைகளுக்குப் பெயர் பெற்றது. இக் காலத்துக்குரிய, சிவனின் பல்வேறு தோற்றங்கள், விஷ்ணு, மற்றும் பல கடவுட் சிலைகள் தென்னிந்தியக் கோயில்களிலும், பலநாட்டு அரும்பொருட் காட்சியகங்களிலும் காணக் கிடைக்கிறது. இச்சிலைகள் பழங்காலச் சிற்பநூல்கள்களிலும்ஆகமங்களிலும் சொல்லப்பட்டுள்ள விதிப்படியே வார்க்கப்பட்டுள்ளன ஆயினும், 11 ஆம் 12 ஆன் நூற்றாண்டுகளைச் சேர்ந்த சிற்பிகள் இவற்றைச் சிறந்த கலை நுணுக்கத்துடனும், கம்பீரத்துடனும் உருவாக்குவதில் தங்கள் சுதந்திரமான கைத்திறனையும் காட்டியுள்ளார்கள். இத்தகைய சிலைகளுள், ஆடல் கடவுளான நடராசப் பெருமானின் சிலைகள் குறிப்பிடத் தகுந்தவை ஆகும்.

[தொகு]கல்வி

சோழர் காலத்தில் கல்வி சமஸ்கிருத மொழியில் பிராமணர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டது. கோயில்களுடன் இணைந்திருந்த கல்விக்கூடங்களில் மிகவும் ஒழுங்கான முறையில் இந்தக் கல்வி பயிற்றுவிக்கப்பட்டது. இப்படி கல்வி பயின்றவர்களே சோழ அரசின் நிர்வாகத்துறையிலும் கோயில்களிலும் உள்வாங்கப்பட்டார்கள்.[15] இன்று போல் பொதுமக்களுக்கான கல்வி என்று எதுவும் இருக்கவில்லை. ஆனால், சமூகம் அல்லது சாதி சார்ந்த தொழில்துறைகளில், தொழில் பயிலுனர் (apprenticeship) முறைப்படி அறிவூட்டப்பட்டது.[16]

[தொகு]மொழி

சோழர் காலத்தில் தமிழ் சிறப்புற்று இருந்தது. நிர்வாகம், வணிகம்இலக்கியம்சமயம் என்று பல தளங்களில் தமிழ் பயன்படுத்தப்பட்டது. சோழர்களின் கல்வெட்டுக்களும் பட்டயங்களும் பல தமிழிலேயே அமைந்துள்ளன. இருப்பினும் "அவற்றின் மெய்கீர்த்திகளில் சமற்கிருத ஆட்சியே மேலோங்கி நின்றது".[17]

[தொகு]இலக்கியம்

சோழர் காலம், தமிழ் இலக்கியத்திற்குச் சிறப்பானதொரு காலமாகும்.இக்காலத்தில் இலக்கிய வளர்ச்சி மிகுந்திருந்தது. ஆனால் சோழர்களால் தமிழ், உயர் கல்வி கூடங்களில் ஊக்குவிக்கப்படவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.[18] சோழர் காலக் கல்வெட்டுக்களில் பல இலக்கியங்கள் குறிப்பிடப் பட்டுள்ளனவாயினும், அவற்றுட் பல தற்காலம் வரை நிலைத்திருக்கவில்லை. இந்து சமய மறுமலர்ச்சியும், ஏராளமான கோயில்களின் உருவாக்கமும், இருந்த இந்துசமய நூல்களைத் தொகுப்பதற்கும், புதியவற்றை ஆக்குவதற்கும் உந்துதலாக இருந்தன. இராசராச சோழன் காலத்தில்தேவாரம்முதலிய நூல்கள் திருமுறைகளாகத் தொகுக்கப்பட்டன. சமணபௌத்த நூல்களும் இயற்றப்பட்டன. ஆயினும் அவை சோழருக்கு முற்பட்ட காலத்தை விடக் குறைவாகவே இருந்தன. திருத்தக்க தேவர்என்பவரால் இயற்றப்பட்ட சீவகசிந்தாமணியும், தோலாமொழித் தேவரால் இயற்றப்பட்ட சூளாமணியும், இந்து சமயம் சாராத முக்கியமான சோழர்கால இலக்கியங்களாகும்.
மூன்றாம் குலோத்துங்க சோழன் காலத்தில் வாழ்ந்த கம்பர் தமிழில் மிகச் சிறந்த இலக்கியமாகக் கருதப்படும் கம்பராமாயணத்தை எழுதினார். வால்மீகியின் இராமாயணத்தைத் தழுவி இது எழுதப்பட்டதாக இருந்தாலும், கம்பர் இதைத் தமிழ் நாட்டுப் பண்பாட்டுக்கு ஏற்ப ஆக்கியுள்ளார். செயங்கொண்டாரரின் கலிங்கத்துப்பரணியும் இன்னொரு சிறந்த இலக்கியம். இரண்டாம் குலோத்துங்க சோழன் பெற்ற கலிங்கத்து வெற்றியை அடிப்படையாகக் கொண்டு இயற்றப்பட்டது இந்நூல். இதே அரசனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டு ஒட்டக்கூத்தர் என்னும் புலவர் குலோத்துங்க சோழ உலா என்னும் நூலையும் தக்கயாகப் பரணிமூவருலா என்ற நூல்களையும் இயற்றியுள்ளார். மேலும் சேக்கிழாரின் பெரிய புராணமும் இக்காலத்ததே. சோழ்ர் காலத்தில்தான் திருப்பாவைதிருவெம்பாவை போன்றவை சோழ நாடெங்கும் ஓதப்பட்டன. சோழர் காலத்தில் இலக்கிய வளர்ச்சி உச்சத்தை எட்டியது.
சைவ சித்தாந்த நூல்களும் இக்காலத்தே மலர்ந்தன. மெய்கண்டார் சிவஞானபோதம் என்ற நூலை இயற்றினார். வாகீச முனிவரின் ஞானாமிர்தம், திருவியலூர் உய்யவந்த தேவநாயனார் எழுதிய திருவுந்தியார்,அருள்நந்தி சிவாச்சாரியார் எழுதிய சிவஞான சித்தியார்உமாபதிசிவாச்சாரியாரின் எட்டு நூல்கள் என சைவ சித்தாந்த அறிவு சோழர் காலத்தில் உருவாகி முறையான வடிவம் பெற்றது.

[தொகு]சமயம்

சோழர் இந்து சமயத்தை, சிறப்பாக சைவ சமயத்தைச் சார்ந்தவர்களாவர். எனினும் பிற மதங்களையும் ஆதரித்தனர். சைவம்வைணவம் என்ற இரு மதங்களும் சோழர் காலத்தில் சிறந்திருந்தது. ஏராளமான சைவ, வைணவ மடங்களும் கோவில்களும் அமைக்கப்பட்டன. அவற்றிற்கு சாற்று முறை செய்ய வரியில்லா நிலங்கள், பணியாளர்கள் எனப்பெரும் பொருள் செலவிடப்பட்டது. இம்மடங்களில் உணவிடுதல், வழிப்போக்கருக்கு உப்பு, விளக்கெண்ணெய் வழங்குவது, நோய்க்கு மருத்துவம் செய்வது ஆகியன் மேற்கொள்ளப்பட்டன. மக்களின் சிந்தனை பக்திநெறியில் செல்ல இவை வழிவகுத்தன. சாளுக்கிய சோழர்கள் சிலர் வைணவர் பால், சிறப்பாக இராமானுசர் தொடர்பில் எதிர்ப்புப் போக்கைக் கடைப்பிடித்ததாகத் தெரிகிறது. இது தொடர்பிலேயே அதிராசேந்திர சோழன் மரணம் அடைந்ததாகச் சிலர் கூறுகிறார்கள்.