Powered By Blogger

Wednesday 15 June 2022

திருப்பூர் சிக்கண செட்டியார்

Courtesy: Mr. CPSelvaraj
திருப்பூர் சிக்கண்ண  செட்டியார்!!!

திருப்பூரை அடுத்த கணபதிபாளையத்தில் கைத்தறியாளார் குடும்பத்தில் 1883 ல் பிறந்த இவர் திருப்பூர் வந்து ஜவுளி வியாபாரம் செய்து பெரும் பொருளீட்டினார். 1932 ல் உருவாக்கிய தனலட்சுமி நூற்பாலை பின் A, B என இரு நெசவாலைகளாக வளர்ந்தது. அக்காலத்தில் இம்மில் நூல் மிக உயர்தரமானது. இங்கு தயாரித்த 8 முழம் வேட்டியும் சேலைகளும்  நேர்த்தியானது. DLM என்ற டர்க்கி டவல் ஏற்றுமதித் தரம் வாய்ந்தது.
   1936-ல் தந்தையார் நஞ்சப்ப செட்டியார் பெயரில் உயர்நிலைப்பள்ளியை ரூ.50,000 செலவில் ஆக்கி அளித்தார், மேலும் அங்கு சிக்கண்ணா இன்ஜினீரிங் பிளாக், வீவிங் பிளாக், தாய் சென்னம்மாள் பெயரில் உணவு விடுதி முதலியவை ஏற்படுத்தித் தந்தார்.

பின்னர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியும், பெரும் பொருட்செலவில் பெரிச்சிபாளையத்தில் மாவட்ட மருத்துவமனையும் இவரது நிதியில் ஏற்படுத்தப்பட்டன.மேலும் மக்கள் குளிக்க, துவைக்க அர்பன் பார்க்-ம் ஏற்படுத்தித்தந்தார்.

1941-42ல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில் நெருக்கடி ஏற்பட்டபோது அவர்களுக்காக நெசவாளர் கூட்டுறவு சொசைட்டி ஏற்படுத்தித் தாமே தலைவராக இருந்து நெசவாளர் வாழ்வில் ஒளியேற்றினார்.

1935 - 1941 வரை அர்பன் வங்கியின் நிர்வாகத்தில்  செயலாளராகவும், 
1941-1945 வரை தலைவராகவும் இருந்து நகர மக்களுக்கு நிதி மேலாண்மையை சிறப்புறச் செய்தார். 

அக்காலத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது திருப்பூர் வட்டார மக்களுக்கே  வண்டிவண்டியாக உணவு தானியங்களைத் தருவித்து மாதக்கணக்கில் அளந்து அளந்து கொடுத்ததோடு இதர செலவுக்குப் பணமும் கொடுத்தார் இந்த வள்ளல்,

இந்த அதிசயம் கேள்விப்பட்ட கோவை மாவட்டக் கலெக்டர் நேரில் கண்டு வியந்து ஆங்கில அரசுக்குப் பரிந்துரைத்து அன்று நாட்டிலேயே உயர்ந்த "இராவ்பகதூர்" பட்டம் வழங்கச் செய்து கெளரவப்படுத்தினார். இவர் வாழ்ந்த வீதிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் நகராட்சியும் பெருமை தேடிக்கொண்டது.

இவ்வாறான ஈகை குணம் கொண்டோர் திருப்பூர் வரலாற்றில் இவரன்றி வேறு யாருமுண்டோ !
  
இப்படிப்பட்டச் சிறப்புகள் மிக்க இப்பெருந்தகை கார் இல்லாத காலத்தில் தேரில் வந்தார். ஆமாம், குதிரை பூட்டிய சாரட்டில்தான் நகர்வலம் வருவாராம்.

இப்படியான இப்பெருந்தகை  25-9-1945 ல் தம் 62 ஆம் வயதில் தம் பணியை விண்ணவர்க்கும்  தொடர்ந்து செய்யக் கிளம்பிச் சென்றார். அவர் புகழ் போற்றுவோம்.

தகவல் உதவி : கவிஞர் சிவதாசன் அவர்கள்.
#TirupurTalks

படித்ததில் சிந்திக்கவைத்தது

No comments:

Post a Comment