Powered By Blogger

Wednesday 22 June 2022

தேவாங்கர் வம்சமும் மற்றும் குலதெய்வங்களும்.

தேவாங்கர் வம்சமும் மற்றும் குலதெய்வங்களும்.  

1துப்புலார்,  சிவகாசி  , விளாம்பட்டி, பூளார் அம்மன் ,சங்கல்ய மஹரிஷி
2துப்புலார்,  மூங்கிலானை  காமாட்சி அம்மன்  ,சங்கல்ய மஹரிஷி
3துப்புலார் , திருப்பூர் , ஐயம்பாளையம், காமாட்சி அம்மன்  , சங்கல்ய மஹரிஷி
4துப்பேலாரு, சித்தூர், கேரளா, ஸ்ரீ லக்ஷ்மி நாராயணமூர்த்தி, சங்கல்ய மஹரிஷி
5சித்து கொலுதார், திருப்பதி, வெங்கடாசலபதி, பதஞ்சலி மஹரிஷி  
6சித்து கொலுதார், பிச்சுப்பட்டி, திருத்தங்கல், சிவகாசி ஸ்ரீவீரமாகாளியம்மா, பதஞ்சலி மஹரிஷி  
7சித்து கொலுதார், பாளையம்பட்டி, அருப்புக்கோட்டை ஸ்ரீவீரமாகாளியம்மா , பதஞ்சலி மஹரிஷி  
8சித்து கொலுதார், மலையாண்டிபட்டணம், குரல்குட்டை, உடுமலைப்பேட்டை, ஸ்ரீவீரமாகாளியம்மா , பதஞ்சலி மஹரிஷி  
9சித்து கொலுதார், திருப்பூர் கணபதி பாளையம்,  மீனாக்ஷி அம்மன், பதஞ்சலி மஹரிஷி  
10சித்து கொலுதார், சிவகாசி ஸ்ரீ காமாட்சி அம்மன், பதஞ்சலி மஹரிஷி  
11சித்து கொலுதார், போடி ரெங்கநாதபுரம், வீருநாகம்மா, பதஞ்சலி மஹரிஷி  
12சித்து கொலுதார், தேனி, தேவாரம், வீருபசவம்மா & வீருநாகம்மா பதஞ்சலி மஹரிஷி  
13சித்து கொலுதார்,தேனி , வீருநாகம்மா, பதஞ்சலி மஹரிஷி  

14சித்து கொலுதார் பூளவாடி, உடுமலைப்பேட்டை, ஸ்ரீதிருவேங்கட ஸ்வாமி பதஞ்சலி மஹரிஷி  
15சித்து கொலுதார் அருப்புக்கோட்டை, விருதுநகர்,மல்லிகார்ஜுனர், பதஞ்சலி மஹரிஷி  

16சித்து கொலுதார் மதுரை மீனாக்ஷி அம்மன், பதஞ்சலி மஹரிஷி  
17சித்து கொலுதார் விருதுநகர் பெரிய  பெராலி, வீரேஸ்வரி பெராலியம்மன் பதஞ்சலி மஹரிஷி  
18சித்து கொலுதார் Dasappa Goundan Pudur (Nal Road) Meenakshi Amman பதஞ்சலி மஹரிஷி  
18சித்து கொலுதார் மூலத்துறை, பதஞ்சலி மஹரிஷி  
19 செவ்வேலாரு Tirupur Vengi Palayam ஸ்ரீ பிசிலு மல்லைய முத்து மஹரிஷி
20 செவ்வேலாரு கொண்டறங்கி கீரனூர், ஒட்டன்சத்திரம் மல்லிகார்ஜுனர் முத்து மஹரிஷி
21செவ்வேலாரு சங்கரன்கோயில் அருள்மிகு ஸ்ரீ பிசிலு மல்லைய ஸ்வாமி  முத்து மஹரிஷி
22செவ்வேலாரு எலுவம்பட்டி, மதுரை வீரமல்லம்மாள் முத்து மஹரிஷி
23செவ்வேலாரு தச்சுக்குடி பிசிலுமல்லியன் / மல்லிகார்ஜுன முத்து மஹரிஷி
24 செவ்வேலாரு மூக்கனூர், கோவை உஜ்ஜைன் மல்லிகார்ஜுன ஸ்வாமி முத்து மஹரிஷி
25முத்தலதவரு தேவாரம், தேனி Rajakondamma & Selvakondamma சிருங்கி மஹரிஷி 
26 முத்தலதவரு தேவாரம், தேனி ஸ்ரீ மல்லிங்கேஸ்வரர் கோயில் சிருங்கி மஹரிஷி 

27 மிஞ்ச்சிலார் சின்னப்பேரளி, விருதுநகர் வரதராஜப் பெருமாள் ,வீர மல்லம்மன் அகஸ்திய மஹரிஷி
28மிஞ்ச்சிலார் குண்டடம், தாராபுரம் மடமணை அகஸ்திய மஹரிஷி
29 மிஞ்ச்சிலார் ஜோதியம்பட்டி, குண்டடம், தாராபுரம் வீர மல்லம்மன் & திருப்பதி அலமேலு மங்கை தாயார் அகஸ்திய மஹரிஷி
30 மிஞ்ச்சிலார் ஆலங்கொம்பு திருப்பதி வெங்கடசலபதி அகஸ்திய மஹரிஷி
31 மரளேலாரு குமாரமங்கலம், உடுமலைப்பேட்டை மல்லீஸ்வரி சமேத மல்லீஸ்வரர் காத்ய மகரிஷி
32மாலிதார் குரல்குட்டை, நரிக்கல்பட்டி, ஜலத்தூர் மூங்கிலானை காமாட்சி அம்மன் பதஞ்சலி மகரிஷி
33மாலிதார்  தேவதானப்பட்டி, தேனி மூங்கிலானை காமாட்சி அம்மன் பதஞ்சலி மகரிஷி
34 மாலிதார் அருப்புக்கோட்டை வீர ஜக்கம்மாள் பதஞ்சலி மகரிஷி
35மாலிதார் தேவதானப்பட்டி, தேனி மூங்கிலானை காமாட்சி அம்மன் பதஞ்சலி மகரிஷி
36 லத்தேகார் வாணவராயன் நல்லூர், படியூர் சஞ்சீவி பெருமாள் அகஸ்திய மகரிஷி
37 லத்தேகார் காங்கேயம் சஞ்சீவி பெருமாள் அகஸ்திய மகரிஷி
38லத்தேகார் கிச்சகத்தியூர், வீர வீரேஸ்வரர்  சௌடேஸ்வரி அகஸ்திய மகரிஷி
39 லத்தேகார் செம்மந்தம்பட்டி ஸ்ரீவீர அக்கம்மாள் அகஸ்திய மகரிஷி
40 லத்தேகார்  மலையாண்டி பட்டணம் ஸ்ரீரம்பன ஸ்வாமி கோயில் அகஸ்திய மகரிஷி
41 லத்தேகார் போடி நாயக்கனூர் சிக்கி வீரம்மன் அகஸ்திய மகரிஷி
42 லத்தேகார் சேலம் தொட்டு தேவரு அகஸ்திய மகரிஷி
43 லத்தேகார் கொண்டம நாயக்கன் பட்டி, நாமக்கல் சௌடம்மன் அகஸ்திய மகரிஷி
44லத்தேகார் மைசூர் நஞ்சுண்டேஸ்வரன் கோயில் அகஸ்திய மகரிஷி
45லத்தேகார் முத்து நாயக்கன்பட்டி, ஓமலூர், சேலம் தொட்டு தேவரு அகஸ்திய மகரிஷி
46லத்தேகார் குள்ளிசெட்டிபட்டி, திண்டுக்கல் பொம்மைய ஸ்வாமி அகஸ்திய மகரிஷி
47லத்தேகார் ஜல்லிபட்டி, திருப்பூர் ஸ்ரீ வெங்கடேசா அகஸ்திய மகரிஷி
48லத்தேகார் வீரபாளையம், பெருந்துறை, ஈரோடு வீரமா சக்தி அம்மன் & மல்லிகார்ஜுன அகஸ்திய மகரிஷி
49லத்தேகார் மூக்கனூர், கோவை ஸ்ரீகரிவரதராஜ பெருமாள் அகஸ்திய மகரிஷி
50லத்தேகார் நரிக்கல்பட்டி, பழனி ஸ்ரீலக்ஷ்மி நாரயண பெருமாள் ஸ்வாமி அகஸ்திய மகரிஷி
51லத்தேகார் கணக்கம்பாளையம், திருப்பூர் ஸ்ரீவெங்கடாச்சலபதி அகஸ்திய மகரிஷி
52லத்தேகார் சிவன்மலை, காங்கயம், ஈரோடு கரிவரதராஜப் பெருமாள் அகஸ்திய மகரிஷி
53லத்தேகார் காட்டம்பட்டி ஸ்ரீவெங்கடாச்சலபதி அகஸ்திய மகரிஷி
54லத்தேகார் நங்கவள்ளி, ஸ்ரீநரசிம்மப் பெருமாள் அகஸ்திய மகரிஷி
55 லத்தேகார் ஆலங்கொம்பு, சிறுமுகை, மேட்டுப்பாளையம் ஸ்ரீ மல்லம்மாள் & மல்லிகார்ஜுன ஸ்வாமி அகஸ்திய மகரிஷி
56 லத்தேகார் சீரநாயக்கன்பட்டி, திண்டுக்கல் ஸ்ரீவரதராஜ பெருமாள் அகஸ்திய மகரிஷி
57 லத்தேகார் குள்ளி செட்டிபட்டி ஸ்ரீகிருஷ்ணா அகஸ்திய மகரிஷி
58 லத்தேகார் மாத்தூர், வெள்ளி திருப்பூர், ஈரோடு ஸ்ரீவரதராஜ பெருமாள் அகஸ்திய மகரிஷி
59லத்தேகார் வடவள்ளி, குமரன் குன்று, காரமடை, கோவை ஸ்ரீபூமி நிலா சமேத வரதராஜ பெருமாள் அகஸ்திய மகரிஷி
60 லத்தேகார் குண்டடம், தாராபுரம் ஸ்ரீவரதராஜ பெருமாள் அகஸ்திய மகரிஷி
61குடிகேளார்  தேவாங்கர் பள்ளி அருகில், அருப்புக்கோட்டை பெத்தண்ண ஸ்வாமி சங்கல்ய மகரிஷி
62குடிகேளார் கொண்ட நாயக்கன்பட்டி, நாமக்கல் பெருமாள், மச்ச அவதாரம் சங்கல்ய மகரிஷி
63கப்பேலார் சீராப்பள்ளி, நமக்க்கல் சௌண்டம்மன் & பெரியாண்டிச்சி  வரதந்த மகரிஷி
64கப்பேலார் சித்தைய்யன் கோட்டை சஞ்சீவி சௌடேஸ்வரி வரதந்த மகரிஷி
65கப்பேலார் நெல்லூர், ஆத்தூர் அருகில், செம்பட்டி, சித்தைய்யன் கோட்டை நெல்லிக்குப்பம்மன்  வரதந்த மகரிஷி
66கப்பேலார்  குள்ளூர் சந்தை, அருப்புக்கோட்டை செல்வ சௌடேஸ்வரியம்மன் வரதந்த மகரிஷி
67கப்பேலார் சின்ன வதம்பச்சேரி நெல்லிக்குப்பம்மன் வரதந்த மகரிஷி
68கப்பேலார் நாமக்கல் கள்ளழகர் வரதந்த மகரிஷி
69கப்பேலார் போதுர்டியப்பட்டி, சிவகாசி பங்காரம்மா  வரதந்த மகரிஷி
70கப்பேலார் கோடங்கிப்பட்டி ஸ்ரீகொள்ளுவீரு  சென்னம்மாள்   வரதந்த மகரிஷி
71கப்பேலார் பெரிய கொமாரபாளையம் அஜ்ஜி அம்மன் (தொட்டு மாத மணை) வரதந்த மகரிஷி
72கப்பேலார் பகவதி பாளையம், காங்கேயம்  ஸ்ரீஇராமலிங்க சௌடேஸ்வரியம்மன் வரதந்த மகரிஷி
73கப்பேலார் குள்ளக்காபாளையம், பொள்ளாச்சி (நெல்லிக்குப்பம்மன்) வரதந்த மகரிஷி
74 கஞ்சலகுட்லாரு சதுரகிரி சிவன் கோயில், சத்பூர், ஸ்ரீவில்லிபுத்தூர் சுந்தர மகாலிங்க பசுவய்யா (சதுரகிரி)    பர்வத மகரிஷி 
75கஞ்சலகுட்லாரு திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர்     பர்வத மகரிஷி 

76கஞ்சலகுட்லாரு அரசூர், கருமத்தம்பட்டி வீரமல்லம்மாள்      பர்வத மகரிஷி 

77கஞ்சலகுட்லாரு  கூலிப்பனை, சூலூர் to சோமனூர் ரோடு, கோவை மல்லீஸ்வரி    பர்வத மகரிஷி 

78கஞ்சலகுட்லாரு பகத்தூர் வீரபத்ரர்     பர்வத மகரிஷி 

79கஞ்சலகுட்லாரு சதுரகிரி மகாலிங்கம் கோயில், பெரையூர், மதுரை ஸ்ரீமல்லிகர்ஜுனர் & ஸ்ரீமரகதவல்லி தாயார்     பர்வத மகரிஷி 

80கடுபேலாரு சேலம் கஞ்சமலை சித்தர் கோவில் சித்தேஷ்வர் சந்திரகுல மகரிஷி, 
81கடுபேலாரு நஞ்சுண்குடி, மைசூர் நஞ்சுண்டேஸ்வரர்   சந்திரகுல மகரிஷி, 
82இருமனேரு திம்மராயம்பாளையம், சிறுமுகை, கோவை வீரமல்லம்மாள்  சதானந்த மஹரிஷி
83இருமனேரு மஞ்சநாயக்கன்பட்டி, துாத்துக்குடி பிள்ளாரம்மன் சதானந்த மஹரிஷி
84இருமனேரு கப்பரதம்பட்டி, சேலம் பெருமாள் சதானந்த மஹரிஷி
85இருமனேரு ஏழுவம்பட்டி வீரமல்லம்மா & தேவுரு மல்லம்மா சதானந்த மஹரிஷி
86இருமனேரு ரங்கநாதபுரம், போடி, தேனி பைரவர் சதானந்த மஹரிஷி

87இருமனேரு சின்னப்பம்பட்டி, இளம்பிள்ளை ஸ்ரீ சென்றாய பெருமாள் 88சதானந்த மஹரிஷி 
89இருமனேரு சேலம் சுகவனேஸ்வரர் சதானந்த மஹரிஷி
90இருமனேரு பூளவாடி வீரமல்லம்மாள் சதானந்த மஹரிஷி
91இல்லிமினாரு ரங்கனாவரம், கருப்புசுவாமி
92ஏந்தேலாரு பணிக்கணூர், சேலம் வேணுகோபால் ஸ்வாமி  கௌசிக மகரிஷி
93ஏந்தேலாரு மைசூர், சாமுண்டீஸ்வரி கௌசிக மகரிஷி
94ஏந்தேலாரு பெரிய வதம்பச்சேரி சௌடாம்பிகையம்மன் கௌசிக மகரிஷி
95ஏந்தேலாரு சந்தையூர், அருப்புக்கோட்டை, விருதுநகர் சௌடாம்பிகை கௌசிக மகரிஷி
96சின்னு கோட்லார் – அட்டகொடா  காக்கிவாடன்பட்டி, சிவகாசி, விருதுநகர் உப்புபட்டி சௌண்டம்மன்  சோமகல்ய மகரிஷி
97சின்னு கோட்லார் – அன்கிடிபீதி  மேற்கு ஆவணிமூல வீதி, மதுரை வீரபத்ர ஸ்வாமி சோமகல்ய மகரிஷி
98 சின்னு கோட்லார் பெரையூர், விருதுநகர், அருப்புக்கோட்டை வீரபத்ர & வீருபண்ணம்மாள் சோமகல்ய மகரிஷி
99 சின்னு கோட்லார் தயில்பட்டி, தமிழ்நாடு வீருபண்ணம்மாள் சோமகல்ய மகரிஷி
100 சின்னு கோட்லார் உடுமலை பெருமாள் சோமகல்ய மகரிஷி
101 சின்னு கோட்லார் சித்தைய்யன் கோட்டை சிவன் சோமகல்ய மகரிஷி
102 சின்னு கோட்லார் கள்ளிக்குடி, சங்கரலிங்கபுரம், விருதுநகர்  ஸ்ரீவீரபத்ர & ஸ்ரீதொட்டுவீரம்மாள்சோமகல்ய மகரிஷி
103 சின்னு கோட்லார் சங்கரலிங்கபுரம், விருதுநகர் ஸ்ரீதொட்டுவீரம்மாள் சோமகல்ய மகரிஷி
104 சின்னு கோட்லார் திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஷ்வரர்  சோமகல்ய மகரிஷி
105 சின்னு கோட்லார் கணக்கநேந்தல், கள்ளக்குறிச்சி  பிள்ளையார் கோவில்சோமகல்ய மகரிஷி
106 பொஜ்ஜெலாரு வண்டமாலபாளையம், அந்தியூர் ஸ்ரீலக்ஷ்மி நாராயணர்  மனுமகரிஷி
107 பொஜ்ஜெலாரு நாதன் ரோடு, திண்டுக்கல் ஸ்ரீமல்லதம்பாரி மனுமகரிஷி
108 பொஜ்ஜெலாரு மல்லதாம்பாறை, ஸ்ரீ வீருசென்னம்மன் மனுமகரிஷி
109 பக்தி மல்லனார் ஸ்ரீசைலம், ஆந்திரா ஸ்ரீமல்லிகார்ஜுன ஸ்வாமி & பிரம்மராம்பிகாதேவி மாண்டவ்ய மகரிஷி
110 பாலிதார்-புளியமரம் மூலத்துறை, மேட்டுப்பாளையம், கோவை ஸ்ரீசங்கரேஸ்வரர் மன்மத மகரிஷி
111 பாலிதார்-முழுகாய் எம்.புதுப்பட்டி, விருதுநகர் ஸ்ரீ சூரம்மன் மன்மதமகரிஷி
112 பாலிதார் எலுவம்பட்டி பெருமாள், வீரசீனு, லகுமு, நாகம்மாள் மன்மதமகரிஷி 
113 பாலிதார் சவக்கட்டுபாளையம், திருப்பூர்  சீதா லக்ஷ்மண சமேத ஸ்ரீரங்கராமர்  மன்மதமகரிஷி
114 பாலிதார் வெள்ளலூர் ஸ்ரீ சங்கரேஸ்வரர் மன்மதமகரிஷி
115 பாலிதார் கோட்டைபட்டி, நாமக்கல் பெருமாள் மன்மதமகரிஷி
116 பாலிதார் திண்டுக்கல் ஸ்ரீ வீரமல்லம்மாள் மன்மதமகரிஷி
117 பாலிதார் தேவதானப்பட்டி, வத்தலக்குண்டு, தேனி மூங்கில் ஆணை ஸ்ரீ காமாட்சி அம்மன் மன்மதமகரிஷி
118 பாலிதார் தேனி ஸ்ரீ பைரவன்  மன்மதமகரிஷி
119 பாலிதார் சாத்தான் கோவில்பட்டி, வத்தலகுண்டு, தேனி ஸ்ரீ வீரநாகம்மாள்,  பெத்தண்ணா & கருப்புசாமி மன்மதமகரிஷி

120 பாலிதார் நெகமம், கோவை ஸ்ரீதேவி, பூதேவி  & பெருமாள் மன்மதமகரிஷி

121பாலிதார் கள்ளக்குறிச்சி, விருதுநகர் ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி & வீரமல்லம்மாள் மன்மத மகரிஷி

122 பாலிதார் வெள்ளலூர் கோவை ஸ்ரீ வீரமகேஷ்வரா & வீரமகேஷ்வரி மன்மத மகரிஷி
123 பாலிதார் மூலத்துறை ////  மன்மத  மகரிஷி
124 பாலிதார் கொடுவிலார்பட்டி பெட்டது ஸ்ரீ சௌண்டம்மன் மன்மத மகரிஷி
125 பாலிதார் பந்தகுடி, மேட்டுக்கடை, திண்டுக்கல் ஸ்ரீ திருமேனி நாதர் மன்மத மகரிஷி
126 பாலிலாரு மூலத்துறை, கோவை ஸ்ரீ ஷங்கரேஸ்வரர்  வீரதந்தி மகரிஷி
127 பாணியர்  கொடிகேயம், திருப்பூர் ஸ்ரீ மகாலக்ஷ்மி சைங்கல்ய மகரிஷி
128 பாணியர் வடுகைபட்டி, பெரியகுளம், தேனி ஸ்ரீ காமக்ஷியம்மன் சைங்கல்ய மகரிஷி
129 பாணியர் தாராபுரம் ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி சைங்கல்ய மகரிஷி
130 பாணியர் பூளவாடி ஸ்ரீ மகாலக்ஷ்மி சைங்கல்ய மகரிஷி
131 அம்புகொள்தார் செம்மண்மேடு ஸ்ரீ கதிர்பெருமாள் விஸ்வமத்திர மகரிஷி
132 அம்புகொள்தார் பெரியமணலி, ஸ்ரீனிவாசப்பெருமாள் நாமக்கல்விஸ்வமத்திர மகரிஷி
133 அம்புகொள்தார் ஆலாங்கொம்பு, கோவை ஸ்ரீவெங்கடாசலபதி விஸ்வமத்திர மகரிஷி
134 அம்புகொள்தார் கிச்சகதியூர் & திம்மராயம்பளையம் ஸ்ரீ காவேரி அம்மன் விஸ்வமத்திர மகரிஷி
135 அம்புகொள்தார் பெண்ணாகரம் ஸ்ரீ வீரபத்திரன் விஸ்வமத்திர மகரிஷி
136 அம்புகொள்தார் ராசிபுரம் ஸ்ரீவீரமாத்திஅம்மன் விஸ்வமத்திர மகரிஷி
137,லத்திகாரு விஷ்ணு மதம் பவானி கொமாரபாளையம் ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் 138,லத்திகாரு கல்வடங்கம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 
139,லத்திகாரு பரமத்தி வேலூர் ஸ்ரீ சோலம்மாள் ஸ்ரீ சோலப்பன் 
140,லத்திகாரு சென்னப்பம்பட்டி ஏனாதி ஸ்ரீ சென்றாய பெருமாள் 
141,லத்திகாரு மேச்சேரி பானாபுரம் ஸ்ரீ பொம்மையா ஸ்ரீ பொம்மக்கா 
142,லத்திகாரு நைனாமலை ஒசக்கோட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் 
143,லத்திகாரு வடவள்ளி மடமனை ஸ்ரீ வரதராஜ பெருமாள் சன்னதி  
144,லத்திகாரு அல்லிசொப்பு ஸ்ரீ சௌடேஸ்வரி அம்மன் குகை சேலம் 
145,, லத்திகாரு மு.சூ.காரர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன்  மேச்சேரி 
146,லத்திகாரு RSP தோட்டம் தொட்டுதேவரு ஸ்ரீ பெரியநாயகி அம்மன் 
147,சௌண்டம்மனு லத்திகாரு பசுவலிங்க செட்டியார் வகையறா  
148,லத்திகாரு ஸ்ரீ சௌண்டிசெட்டி கத்தியமனே தேவர்மனே ஜலகண்டாபுரம் 
149,மரளேலாரு ஏந்தேலாரு வேலக்கவுண்டம்பாளையம் ஸ்ரீ பெரியநாயகி அம்மன்
150,மரளேலாரு தென்கலை சோரகை ஸ்ரீ வேட்றாய பெருமாள் 
151,மரளேலாரு வடகலை தீர்த்தவாசிகள் சோரகை ஸ்ரீ வேட்றாய பெருமாள் 
152,மரளேலாரு பெரியநாயகி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி கொமாரபாளையம் 
153,இருமனேரு நைனாமலை ஸ்ரீ வரதராஜ பெருமாள் 
154, இருமனேரு கரட்டாண்டிபட்டி ஸ்ரீ திப்பர மஹாதேவி
155 ,இருமனேரு கொமாரபாளையம் 
156,இருமனேரு ஸ்ரீ வீரமாசக்தி ஸ்ரீ வீரேஷ்வர் அமரகுந்தி 
157, இருமனேரு ஸ்ரீ வீரமாஸ்தி அம்மன் அமரகுந்தி 
158, இருமனேரு ஸ்ரீனிவாச பெருமாள் வனவாசி 
159,இருமனேரு ஸ்ரீ வெங்கடேச பெருமாள் கொக்கியூர் 
160,ஏந்தேலாரு காரமடை  ஸ்ரீ அரங்கநாத பெருமாள்  
161,ஏந்தேலாரு ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் நங்கவள்ளி 
162,மடாகஞ்சி ஏந்தேலாரு தொட்டு தேவரு பாப்பிரெட்டியூர் ஜலகண்டாபுரம் 163,மடாகஞ்சி கத்தியமனே ஏந்தேலாரு சேலம் சின்னப்பம்பட்டி
164, கப்பேலாரு கொமாரபாளையம் 
165, கப்பேலாரு செம்மனள்ளி தென்கலை தீர்த்தவாசி ஸ்ரீ வரதராஜ பெருமாள் 
166, கப்பேலாரு சின்ன பணிக்கனூர் வடகலை ஸ்ரீ பைரவகரிய பெருமாள் 
167, கப்பேலாரு தேவர்மனே பொம்மி செட்டியார் கத்தியமனே ஸ்ரீ சித்தேஸ்வரர் 
168, கப்பேலாரு சீராப்பள்ளி தொட்டி தேவருமனே ஸ்ரீ பெரியாண்டிச்சி 
169, கப்பேலாரு பொம்மசமுத்திரம் சங்கரசெட்டியார் கத்தியமனே தேவருமனே  
170, அம்புகொள்னேரு வனவாசி ஸ்ரீ கதிரி பெருமாள் 
171,அம்புகொள்னேரு காகாபாளையம் ஸ்ரீ ஸ்ரீனிவாசபெருமாள் கனககிரி  172,அம்புகொள்னேரு பழனி ஸ்ரீ ஸ்ரீனிவாசபெருமாள் 
173, பொஜ்ஜெலாரு கொங்குபட்டி ஸ்ரீ இரட்டை கம்பத்து பெருமாள் 
174, பொஜ்ஜெலாரு தொப்பம்பட்டி ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமாள் 
175,பொஜ்ஜெலாரு பவானி கொமாரபாளையம் ஸ்ரீ லட்சுமி நாராயண சுவாமி 
175, பொஜ்ஜெலாரு வேம்படிதாளம் நடுவனேரி திருப்பதி ஸ்ரீ நாகர் ஸ்ரீ ஸ்ரீ வேங்கடேச பெருமாள் 
177,  கஞ்சலகூடதவரு தேவாரம் ஸ்ரீ வீரபத்திர சுவாமி
178, கஞ்சலகூடதவரு மல்லப்பனூர் ஸ்ரீ அர்த்தனாரி ஈஸ்வரர் ஸ்ரீ வீரமாஸ்தி அம்மன் 179, கஞ்சலகூடதவரு வெள்ளார் ஸ்ரீ மல்லேஸ்வர சுவாமி 
180,குடிகேலாரு பவானி கொமாரபாளையம் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன்.
181, குடிகேலாரு நரிக்கல்பட்டி  ஸ்ரீ காமாட்சிஅம்மன் 
182, குடிகேலாரு பணிக்கனூர் ஸ்ரீ குழலூதி வேணுகோபால் சுவாமி 
183, குடிகேலாரு ராக்கிபட்டி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் 
184, பக்தி மல்லனார் அம்மாபேட்டை ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி 
185, ஆல்கூழ்னேரு திப்பம்பட்டி வீரனூர் ஸ்ரீகம்பத்து பெருமாள் 
186, செவ்வேலாரு மடமனை கொண்டறங்கி ஸ்ரீ மல்லிகார்ஜுன சுவாமி 
187, இரேமனையர் போடி ரெங்கநாதபுரம் ஸ்ரீ வீரமல்லம்மா ஸ்ரீ தேவரு மல்லம்மா சுவாமி
188, பாலேலாரு வீரதந்தி மஹரிசி  ஸ்ரீ வீரபத்திர சுவாமி அமரகுந்தி 
189,அன்னேலாரு பணிக்கனூர் ஸ்ரீ குழலூதி வேணுகோபால் சுவாமி 
190,சின்ன கொட்லாரு சோமகல்ய மஹரிசி ஸ்ரீ வீரபத்திர சுவாமி ஆலாங்கொம்பு
191, மாலிதார் தேவதானப்பட்டி ஸ்ரீ மூங்கிலணை காமாட்சி அம்மன்  
192. பாணியார், பெரியகுளம் வட்டம்,வடுகபட்டி சைங்கல்ய மகரிஷி கோத்திரம், ஸ்ரீ காமாட்சியம்மன் ஸ்ரீ முத்தையா சுவாமி கோவில்

Wednesday 15 June 2022

திருப்பூர் சிக்கண செட்டியார்

Courtesy: Mr. CPSelvaraj
திருப்பூர் சிக்கண்ண  செட்டியார்!!!

திருப்பூரை அடுத்த கணபதிபாளையத்தில் கைத்தறியாளார் குடும்பத்தில் 1883 ல் பிறந்த இவர் திருப்பூர் வந்து ஜவுளி வியாபாரம் செய்து பெரும் பொருளீட்டினார். 1932 ல் உருவாக்கிய தனலட்சுமி நூற்பாலை பின் A, B என இரு நெசவாலைகளாக வளர்ந்தது. அக்காலத்தில் இம்மில் நூல் மிக உயர்தரமானது. இங்கு தயாரித்த 8 முழம் வேட்டியும் சேலைகளும்  நேர்த்தியானது. DLM என்ற டர்க்கி டவல் ஏற்றுமதித் தரம் வாய்ந்தது.
   1936-ல் தந்தையார் நஞ்சப்ப செட்டியார் பெயரில் உயர்நிலைப்பள்ளியை ரூ.50,000 செலவில் ஆக்கி அளித்தார், மேலும் அங்கு சிக்கண்ணா இன்ஜினீரிங் பிளாக், வீவிங் பிளாக், தாய் சென்னம்மாள் பெயரில் உணவு விடுதி முதலியவை ஏற்படுத்தித் தந்தார்.

பின்னர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரியும், பெரும் பொருட்செலவில் பெரிச்சிபாளையத்தில் மாவட்ட மருத்துவமனையும் இவரது நிதியில் ஏற்படுத்தப்பட்டன.மேலும் மக்கள் குளிக்க, துவைக்க அர்பன் பார்க்-ம் ஏற்படுத்தித்தந்தார்.

1941-42ல் இரண்டாம் உலகப்போர் சமயத்தில் கைத்தறி நெசவாளர்களுக்கு தொழில் நெருக்கடி ஏற்பட்டபோது அவர்களுக்காக நெசவாளர் கூட்டுறவு சொசைட்டி ஏற்படுத்தித் தாமே தலைவராக இருந்து நெசவாளர் வாழ்வில் ஒளியேற்றினார்.

1935 - 1941 வரை அர்பன் வங்கியின் நிர்வாகத்தில்  செயலாளராகவும், 
1941-1945 வரை தலைவராகவும் இருந்து நகர மக்களுக்கு நிதி மேலாண்மையை சிறப்புறச் செய்தார். 

அக்காலத்தில் நாட்டில் பெரும் பஞ்சம் ஏற்பட்டபோது திருப்பூர் வட்டார மக்களுக்கே  வண்டிவண்டியாக உணவு தானியங்களைத் தருவித்து மாதக்கணக்கில் அளந்து அளந்து கொடுத்ததோடு இதர செலவுக்குப் பணமும் கொடுத்தார் இந்த வள்ளல்,

இந்த அதிசயம் கேள்விப்பட்ட கோவை மாவட்டக் கலெக்டர் நேரில் கண்டு வியந்து ஆங்கில அரசுக்குப் பரிந்துரைத்து அன்று நாட்டிலேயே உயர்ந்த "இராவ்பகதூர்" பட்டம் வழங்கச் செய்து கெளரவப்படுத்தினார். இவர் வாழ்ந்த வீதிக்கு இவர் பெயர் சூட்டப்பட்டு திருப்பூர் நகராட்சியும் பெருமை தேடிக்கொண்டது.

இவ்வாறான ஈகை குணம் கொண்டோர் திருப்பூர் வரலாற்றில் இவரன்றி வேறு யாருமுண்டோ !
  
இப்படிப்பட்டச் சிறப்புகள் மிக்க இப்பெருந்தகை கார் இல்லாத காலத்தில் தேரில் வந்தார். ஆமாம், குதிரை பூட்டிய சாரட்டில்தான் நகர்வலம் வருவாராம்.

இப்படியான இப்பெருந்தகை  25-9-1945 ல் தம் 62 ஆம் வயதில் தம் பணியை விண்ணவர்க்கும்  தொடர்ந்து செய்யக் கிளம்பிச் சென்றார். அவர் புகழ் போற்றுவோம்.

தகவல் உதவி : கவிஞர் சிவதாசன் அவர்கள்.
#TirupurTalks

படித்ததில் சிந்திக்கவைத்தது

Wednesday 5 January 2022

சிறுகதைகள் தொகுப்பு

படித்ததில்  பிடித்தது-
*இங்க் பேனா* - சுஜாதா

ஒரு விசித்திரமான எண்ணம் வந்தது - அது இங்க் பேனாவில் எழுதிப் பார்க்க வேண்டும் என்பது!.

நல்ல மத்தியான வெயிலில் வண்டியைக் கிளப்பி,  பேனாவைத் தேடிக்கொண்டு தி.நகரில் உள்ள கடைக்குப் போனேன்.

"இங்க் பென் இருக்கா?"

ஏற இறங்க ஒரு முறை பார்த்துவிட்டு "ஒண்ணே ஒண்ணு இருக்கு" என்று ஒரு அழுக்கான பேனாவை எடுத்துக் கொடுத்தார்.

"சரி, ஒரு பாட்டில் இங்க் கொடுங்க"

"இங்க் இல்லை சார், பேனா மட்டும் தான்"

வேண்டாம் என்று  சொல்லிவிட்டு பஸ்ஸ்டாண்டு பக்கத்தில் ஒரு கடைக்குப் போனேன். அந்தக் கடையில் ஒரே ஒரு பாட்டில் இங்க் இருந்தது, வாங்கிப் பார்த்தால் அதன் தயாரிப்பு தேதி ஜூலை 1998 என்று அட்டையில் அச்சாகியிருந்தது. மூடியைத் திறந்தால் செடி முளைத்திருந்தாலும் முளைத்திருக்கலாம் என்று, ஹிக்கின்பாதம்ஸ் போனேன். அங்கு இங்க், இங்க் பேனா இரண்டுமே இருந்தன.

இரண்டு பேனாவும், ஒரு 'பிரில்' இங்க் பாட்டிலும் வாங்கினேன். ( பிரில் இங்க் ஒரு பாட்டிலின் விலை இப்ப என்ன தெரியுமா ? 
 12/= ரூபாய்.) நேராக வீட்டுக்கு வந்து கதை, கவிதை எல்லாம் எழுதவில்லை, சும்மா இரண்டு வரி எழுதிப் பார்த்தேன்.

நிஜமாகவே இங்க் பேனாவில் எழுதுவது ஒரு தனி சுகம் தான்!

சின்ன வயதில் ( ஐந்தாம் வகுப்பு முதல் +2 வரை ) பள்ளிக்கு இங்க் பேனா தான். பால் பாயிண்ட் பேனா எடுத்து வந்தால் ஆசிரியர்கள் அபகரித்துக் கொள்வார்கள், அல்லது உடைத்துவிட்டு வெளியே தூக்கிப் போடுவார்கள்.

நான் படித்த காலத்தில் முக்கால்வாசிப் பேனாக்களுக்கு பிராண்ட் எல்லாம் கிடையாது, ஐந்திலிருந்து ஏழு ரூபாய்க்கு நல்ல பேனா கிடைக்கும். ஒரு ரூபாய்க்கு இரண்டு கோல்ட் கலர் நிப்பு கிடைக்கும். கேம்லின்(Camlin) பேனா ஒன்பது ரூபாய் என்று நினைக்கிறேன், அட்டைப் பெட்டியில் வரிசையாக பிளாஸ்டிக் கவர் போட்டு வைத்திருப்பார்கள். பேனா நடுவில் கண்ணாடி ஜன்னல் இருக்கும். அதில் இங்க்கின் அளவு தெரியும். மேஸ்திரி வைத்திருக்கும் மட்டப் பலகை போல் அதில் இருக்கும் ஒரு நீர்க்குமிழியைப் பார்ப்பதே சில சமயம் எனக்குப் பொழுதுபோக்கு.

கடைகளில்  தடியாகக் கட்டை பேனா கிடைக்கும். ஒருவிதமான புகை வாசனை அடிக்கும். ரொம்ப நேரம் எழுதினால் கட்டைவிரல் ஜாயிண்ட வலிக்கும். எங்கள் கிளாசில் சேட்டு வீட்டுப் பசங்கள் தான் ஹீரோ பேனா உபயோகப்
படுத்துவார்கள்.  பேனாவின் மூக்கில் அம்பு குறி இருக்கும். இங்க்கை பாட்டிலில் உறிஞ்சி எடுக்க வேண்டும். எவ்வளவு உறிஞ்சி எடுத்தாலும், முழுவதும் நிரம்பாதது போல் உணர்வு இருந்துகொண்டே இருக்கும். இதற்குப் பயந்து கொண்டு பரிட்சைக்கு எடுத்துச்செல்ல மாட்டோம்.

பேனாவிற்கு இங்க் போடுவதற்கு கண் மருந்து போடுவது போல ஒரு ஃபில்லர் தேவை. இங்க் ஃபில்லர். கண்ணாடி இங்க் ஃபில்லர் பிளாஸ்டிக்காக மாறி, இப்பொழுது துப்பாக்கிக்கு குண்டு போடுவது போல் காட்ரிஜ் எல்லாம் வந்துவிட்டது.  ரொம்ப அனுபவம் உள்ளவர்கள் பாட்டிலிருந்து அப்படியே நிரப்புவார்கள். கை ஆடாமல் கவனமாகப் போட வேண்டும்.

படிக்கும் காலத்தில் கருப்பு நிற இங்க் தான் எப்போதும் உபயோகிப்பேன். பிரில் இங்க் தான் அப்பொழுது பிரபலம், செல்பார்க் கருப்பு-நீலம் கலந்து 'புளு-பிளாக்' என்று ஒரு கலர் வித்தியாசமாக இருக்கும். அதே போல் 'டர்காய்ஸ் புளு' ( Turquoise-Blue) எனக்கு ரொம்ப பிடிக்கும். இதில் எழுதினால் மார்க் வராது என்று பரிட்சைக்கு உபயோகப் படுத்தமாட்டேன். இங்க் கலருக்கு எல்லாம் நல்ல பேர் இருக்கும்.  ராயல் புளூ, பர்மனெண்ட் பிளாக், லாரல் ரோஸ், டர்காய்ஸ் புளூ இப்படி. ஒத்தக்கடையில் கேம்லின் இங்க் கிடைக்கும், பிரில்லை விட இது டார்க்காக இருக்கும். பேனாவை மூடாமல் விட்டால் பிசுபிசுக்காகத் தட்டிப்போய் பேனாவை சர்வீஸ் செய்ய வேண்டும். 
வடகலை தென்கலை சம்பிரதாயம் போல், ஒரு பிராண்ட் இங்க்கை உபயோகப்படுத்துபவர்கள், மற்ற பிராண்ட் இங்க்கை  உபயோகப்படுத்த மாட்டார்கள்.

புதுப் பேனா வாங்கியவுடன் கழுத்துப்பட்டை பகுதியில் உள்ள மரையில் விளக்கெண்ணை வாசனை வரும். இங்க் போட்ட உடன் சரியாக எழுதாது. கொஞ்சம் மக்கர் பண்ணும். சரியான அளவில் தோய்த்து சரியான கோணத்தில் எழுதவேண்டும். இங்க்கை உதறி, நிப்பைத் தடவிக் கொடுத்து, தாஜா செய்ய வேண்டும். நம்ம வழிக்கு வருவதற்கு ஒரு வாரம் ஆகும். பிறகு அது சமத்தாக நாம் சொல்லுவதை எல்லாம் கேட்கும். ரொம்ப நாள் பழகிய பேனாவாக இருந்தால் அதை யாராவது கேட்டால் கொடுக்க மனம் வராது. மற்றவர் உபயோகப்படுத்தினால், அழுத்தி எழுதி, நிப் கோணலாகி எழுத்து பட்டை அடிக்குமோ என்ற மனசு படபடக்கும்.

கொஞ்சம் நாள் எழுதிய பின் நிப்புக்கு அடியில் ஒரு வித பிசுபிசுப்பு வந்துவிடும். ஞாயிற்றுக்கிழமை நிச்சயம் பேனாவை சர்விஸ் செய்துவிடுவேன்.

பேனாவை சுத்தம் செய்வது என்பது ஒரு கலை. மிதமான வெந்நீரில் அதை ஊற வைத்து, அதில் படிந்திருக்கும் இங்க்கை எல்லாம் சுத்தமாக எடுத்துவிட்டு, கிழிந்த வேஷ்டித் துணியால் அதைத் துடைக்க வேண்டும். காய்ந்த பின் இங்க்கை நிரப்பி வழிக்குக் கொண்டுவர வேண்டும்.

கையில் ரத்தம் வந்தால் உடனே வாயில் வைப்பதை போல், விரலில் இங்க் வழிந்தால் தலையில் தேய்த்துக் கொள்வோம். தலை மயிர் இன்னும் கருப்பாக இருப்பதற்கு இதுவும் ஒரு காரணம் என்று நினைக்கிறேன். எவ்வளவு நல்ல பேனாவாக இருந்தாலும், கட்டை விரல் ஓரத்திலும், சட்டை ஜோபியிலும் கறைபடியாமல் இருக்காது. சில சமயம் கழுத்துப்பட்டை பகுதி மரையில், நூல் சுற்றி எழுதுவோம். மரை திறக்க முடியாமல் போனால் பற்களால் கடித்துத் திறப்போம் (பேனாவின் கழுத்தில் தழும்பு தெரியும்) வாயெல்லாம் நீலக் கலரில் கிருஷ்ணர் வேஷத்தில் என்.டி.ஆர் போல காட்சியளித்திருக்கிறோம்.

கட்டாயம் பேனாவை ரிப்பேர் செய்ய பென்சில் பாக்ஸில் எப்போதும் சில உபகரணங்கள் இருக்கும் - சாக் பீஸ்/சின்ன துணி அப்பறம் பிளேடு.  பேனா எழுதவில்லை என்றால் சாக்பீசை மூக்கில் வைத்தால் அட்டை போல், இங்க்கை உறிஞ்சும். அதே போல் பேப்பரில் இங்க் சிந்திவிட்டாலும் அதே சாக்பீஸ் தான். நிப் இடுக்கில் மெல்லிய பேப்பர் நார் புகுந்துவிட்டால், நடுவில் கீறி அதை எடுத்துவிட்டால் உயிர் பெற்று எழுதும். இவை எதுவும் வேலை செய்யவில்லை என்றால் பேனாவை உதற வேண்டும்.

இங்க் பேனாவில் எழுதினால் கையெழுத்து நன்றாக வரும் என்று நம்பிக்கை. இதைத் தவிர பள்ளிக்கூடத்தில் நம்மைவிட குண்டாக ஒருவனை அடிக்க முடியவில்லை என்றால், வீட்டுக்குப் போகும் போது  புறமுதுகில் குத்துவது போல அவன் சட்டைக்குப் பின்புறத்தில் இங்க் தெளித்து பழிக்குப் பழி தீர்த்துக்கொள்வோம். பள்ளி கோடை விடுமுறை விட்ட அன்று எல்லோரும் எல்லோருக்கும் இங்க் தெளித்து விளையாடுவோம்.

கல்லூரிக்குப் போன பிறகு இங்க் பேனாவில் எழுதினால் கவுரவக் குறைச்சல், அதனால் பால்பாயிண்ட் பேனாவுக்கு மாறினோம். டாய்லட் பேப்பர் போல், யூஸ் செய்துவிட்டு ரீஃபில் தீருவதற்குள், பேனா தொலைந்துவிடும், அல்லது உடைந்துவிடும்.

இன்று இங்க் பேனா ஒரு விலை உயர்ந்த நினைவுப் பரிசாகவும், ஷோ கேசில் அலங்காரப் பொருளாகவும் மாறிவிட்டது.

என் அப்பாவிற்குப் பரிசாக வந்த அந்த இங்க் பேனாவை என்னால் மறக்க முடியாது. என்னிடம் கொடுத்தார். நல்ல கனமாக இருந்தது. பேனாவின் மேல் அடித்திருக்கும் பெயிண்டைச் சுரண்டிப் பார்த்ததில் பித்தளை பளபளத்தது.  ஆனால் இங்க் பேனாவை இப்போது நாம்  தொலைத்துவிட்டோம். 

*நான் ரசித்தது பிறர் ரசிக்க*🙄

For Sujatha fans👆👍

சேலம் மாவட்டத்தின் சிறப்புகள்

*சுகவாசிகளின் சேலம்*
சேலம் வாசிகள் சுகவாசிகள். அங்கே நடக்கும் எல்லா விஷயங்களையும் பார்த்தால் எனக்கு அப்படித்தான் தோன்றுகிறது.
பாருங்களேன்; மாடர்ன் தியேட்டர்ஸ் சேலத்தில் இருந்ததால் அனைத்து பழைய பெரும் நடிகர்களும் நடிகைகளும் சேலத்தைத் தங்கள் தாய்வீடாகவே கொண்டாடினார்கள். கண்ணதாசன் முதல் கலைஞர் வரை, எம்ஜிஆர் முதல் ஜெய்சங்கர் வரை இவர்கள் அத்தனை பேரையும் ஆரம்ப காலத்தில் போஷித்து வளர்த்து விட்டது இங்கிருக்கும் மாடர்ன் தியேட்டர்ஸ். R S மனோகருக்கு சேலம் என்ற நினைவு வந்தாலே சிரத்தின் மேல் கைகூப்பி வணங்குவார். சேலத்தின் மீது இருந்த பக்தியினால் தன் ஒவ்வொரு புதிய நாடகத்தையும் ஆடி மாதம் மாரியம்மன் கோவில் திருவிழா சமயத்தில் நடைபெறும் அரசுப் பொருட்காட்சியில் அரங்கேற்றுவார். சொல்லி வைத்தது போல் ஒவ்வொரு நாள் மாலையிலும் மழை கொட்டும்.
மலபார் ஹோட்டலில் பாதாம் ஹல்வா நெய் சொட்டச் சொட்ட ஒண்ணார்ரூபாய்க்குக் கண்ணாடித் தாளில் சுற்றித் தருவார்கள். சின்னப் பிள்ளை போல் ஒரு மணி நேரத்திற்கும் மேல் துளித்துளியாக அது தீர்ந்து போகாத வண்ணம் சாப்பிடலாம். எந்த ஹோட்டலிலும் இனிப்பு வாங்கினாலும் கைப்பிடி மிக்ஸரோ,பூந்தியோ வைப்பார்கள். இனிப்பு திகட்டக் கூடாதாம். சேலம் டிஃபன் என்று நினைத்தாலே பாவ்லோவ்வின் நாய் போல நாவில் நீர் ஊறும். எத்தனை வகை!! வெள்ளையப்பம் என்று ஒரு பதார்த்தம். சேலத்தில் மட்டுமே கிடைக்கும். தற்போதைய பணியாரம் சற்றே உசில மணி அளவுக்கு பெரிதானால் அதுதான் வெள்ளையப்பம். சுடச்சுட இலையில் பக்க வெஞ்சனங்களுக்கு நடுவே அது வரும்போது மகாராணி பல்லக்கில் வருவது போல இருக்கும். அதன் உள்ளே முழிச்சு முழிச்சு கடலைப்பருப்பும் தேங்காய்ப் பல்லும் இரண்டொரு மிளகும் கறிவேப்பிலையும் நாவில் தட்டுப்படும் போது மெய் மறந்து கண்கள் சொருகி ஒரு விதமாய் ஆகிவிடும்.
அதைவிடுங்கள். சினிமாவுக்கு என்று கிளம்பி விட்டால் கவலையே கிடையாது. ஏனென்றால் தியேட்டர்கள் வரிசையாக அடுத்தடுத்து இருக்கும். ஒன்றில் இடம் கிடைக்காவிட்டால் அடுத்ததில் கிடைக்கும். அவர்களுக்குள்ளும் ஒரு ஒற்றுமை இருக்கும். ஒரு தியேட்டரில் படம் ஆரம்பித்த பிறகுதான் அடுத்ததில் டிக்கெட்டே கொடுக்க ஆரம்பிப்பார்கள். இதில் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று: நமக்கும் டிக்கெட் கிடைக்கும். இரண்டு: அவர்களுக்கும் மொக்கைப் படமாக இருந்தாலும் கூட்டம் சேரும். சேலத்தில் ஓடாத படம் எப்போதும் இருந்ததில்லை.
காஃபி விஷயத்துக்கு வருவோம். எங்கேயாவது கியூவில் நின்று காஃபிப் பொடி வாங்கியிருக்கிறீர்களா? அது சேலத்தில் நடக்கும்; ராஜகணபதி அருகே நரசுஸ் காஃபி கம்பெனியில் கொட்டையை அரைத்துக் கொண்டே இருப்பார்கள். சுடச்சுட,மணக்க மணக்க, வரிசையில் நின்று காஃபி பொடி வாங்கி வருவோம். வீட்டில் கொண்டு வந்து டப்பாவுக்குள் போடும் போது வீடே மணக்கும். என் அம்மா சூடாக இருக்கும் அந்த காஃபி பொடியில் இரண்டு சிட்டிகை வாயில் போட்டுக் கொண்ட பிறகுதான் டப்பாவில் போடுவார்.
அப்புறம்  சின்னக் கடைவீதியில் இருக்கும் அந்த AKB மளிகை,OVN மளிகைக் கடைகள் பிரசித்தமானவை. சுத்தமான,நயமான, தரமான பொருள்களைத் தருவார்கள். காலையில் லிஸ்ட்டைக் கொடுத்து விட்டு வந்தால் மாலைக்குள் அவர்களே கூடையில் வைத்து வீட்டிற்குக் கொண்டு வந்து தருவார்கள்.  பொட்டலங்கள் வந்த பேப்பர்கள்,சுற்றி வந்த சணல் சரடுகள் எல்லாம் பின்னால் தேவைப்படும் என்று எடுத்து எரவாணத்தில் வைத்து விடுவோம். அங்கே ஏற்கனவே ஆறுமாதமாக சேர்த்து வைத்திருக்கும் இந்த குப்பைகள் இருக்கும். அரிதாக வரும் பிளாஸ்டிக் கவர்களில் காற்றை ஊதி,இறுக்க மூடிக்கொண்டு,பட்டாஸ் வெடிப்போம்.
பள்ளிக்கூடங்கள் என்று பார்த்தால் பாரதி வித்யாலயா, லிட்டில் ஃப்ளவர்,கோகுலநாத் இவைகள் பிரசித்தம். இறுதி ஆண்டு தேர்வுகளில் ரிசல்ட் வந்தால் ஆசிரியர்களும் மாணவர்களும் "அந்தப் பள்ளியில் என்ன ரிசல்ட்" என்று உடனடியாக கேட்போம். ஜங்ஷன் பாரதி வித்யாலயா, சாரதா பெண்கள் பள்ளிகள் எப்போதும் முதலிரண்டு இடங்களில் இருக்கும். மூன்றாவது இடத்திற்குத்தான் பெரும் போட்டி நடைபெறும்.
இரண்டாம் அக்கிரஹாரத்தின் முடிவிலும், சின்னக் கடைத்தெரு தொடக்கத்திலும் வரிசையாக டாக்டர்கள் இருப்பார்கள். ஃபீஸ் ஐந்து ரூபாய். குழந்தைகளின் டாக்டர் பாஸ்கரன், மோகன்ராஜ் தவிர கண் டாக்டர் வாலீஸ்வரன்,ராஜகணபதி அருகே ஒரு ரூபாய் டாக்டர் சுப்பிரமணியன் இவர்களெல்லாம் புகழ் பெற்றவர்கள். விசேஷம் அதில் இல்லை. வாலீஸ்வரன் டாக்டர் செய்யும் சேட்டைகள் மிகவும் தமாஷாக இருக்கும். மூன்று தலைமுறைகளுக்கும் அவர்தான் கண் டாக்டர். உள்ளே போனால் "ராமனாதன் இவருக்கு சொட்டு மருந்து கண்ணில் விடுங்கோ" என்று சொல்லிவிட்டு எதிரில் இருக்கும் டீக்கடைக்கு சென்று தினத்தந்தி படிப்பார். உள்ளே கண்ணை மூடிக்கொண்டு பேஷண்ட் உட்கார்ந்திருப்பார். " சார், டாக்டர் எப்போ வருவார் சார்" என்றால், ராமனாதன் (அவர்தான் அங்கே கம்பௌண்டர்;சில சமயங்களில் அவரே கண் டாக்டர்!)                " இதோ,இப்ப வந்திருவார்" என்று சொல்லி விட்டு அவர் டீக்கடைக்கு போய் டாக்டர் முன்னால் தலையை சொறிவார்.    " இன்னுமா அவன் உள்ளே இருக்கான்" என்று கேட்டுக் கொண்டே உள்ளே வருவார். அது பேஷண்ட் காதிலும் விழும். என்றாலும் இருவரும் கவலைப் பட மாட்டார்கள். "என்ன கண் எரியறதா" என்று கேட்டுக் கொண்டே கண்ணைத் திறந்து பார்ப்பார். பதிலெல்லாம் அவருக்குத் தேவையில்லை. ஆனால் மிகச் சரியான மூக்குக் கண்ணாடி அவரிடம் கிடைக்கும். அந்தத் தெளிவு அவருக்கே உரித்தானது. வாலீஸ்வரன் என்ற பெயரை மறந்தாலும் ராமனாதன் என்ற பெயரை எல்லோரும் நினைவில் வைத்திருப்பார்கள். பேஷண்ட் காது பட ஐம்பது முறையாவது டாக்டர் அந்த ராமனாதனை விளிப்பார். எனவே அந்த பெயர் மனதில் நின்று விடும். இன்னும் சேலத்தைப் பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். அத்தனை விசேஷங்கள் அங்கே இருக்கின்றன.
கடைசியாக அந்த ஊர்க் கடவுள் ஈஸ்வரன் பேர் என்ன தெரியுமா? 
*சுகவனேஸ்வரன்*